Wednesday, 22 June 2016

என் நேசம்

காற்றில் மிதக்கும்
மலரின் இதழாய்
மனமும் இங்கே மிதக்குதே!!
கனலைத் தாண்டி
புனலைத் தாண்டி 
உன் காலடிதனைத் தழுவுதே!!
உன் கண்கள் காண
கைகள் தீண்ட
உயிரும் இங்கே பிறிந்ததே!!
காதல் வளர்க்க 
உயிரைத் தொடுத்தேன்!
உன்னிடம் கொடுத்தேன்
உயிரை விடுத்தேன்!!
என் நெஞ்சம் தீயில்
வெந்திடும்போதும்,
காதல் செய்வேன்
உன்னை எப்போதும்!
ஜனனம் மரணம்
என்னைத் தீண்டும்,
என் ஆவி சுமக்கும்
காதலை அல்ல!
யுகங்கள் தாண்டும்,
காலங்கள் தாண்டும்,
என் நேசம் அதனைத்
தாண்டியே வாழும்!

No comments:

Post a Comment