உலகத்து மொழிகளிலே,
நான் வியந்த மொழி மௌனம்!
ஊமை கூட பேசும் மொழி
ஓங்கி உயர்ந்த புனித மொழி
சித்தனையும் பித்தனாக்கும்,
நான் வியந்த மொழி மௌனம்!
ஊமை கூட பேசும் மொழி
ஓங்கி உயர்ந்த புனித மொழி
சித்தனையும் பித்தனாக்கும்,
இம்மொழி
பித்தனையும் சித்தனாக்கும்!
சண்டைகள் வளரா வெட்டும் மொழி,
பல சங்கடங்கள் பகிரா மறைக்கும் மொழி!
மனிதனின் மௌன அளவு ,
பித்தனையும் சித்தனாக்கும்!
சண்டைகள் வளரா வெட்டும் மொழி,
பல சங்கடங்கள் பகிரா மறைக்கும் மொழி!
மனிதனின் மௌன அளவு ,
அவன் பக்குவத்தின் நீளம்,
அவன் ஞானத்தின் அகலம்!
இதன் பெருமையை உணர்ந்துகொண்டு
சூறையாடினோரும் உண்டு!
இதன் அருமை அறியாமலே
சூடுபட்டோரும் உண்டு!
ஒரே மொழியின்,
இதன் பெருமையை உணர்ந்துகொண்டு
சூறையாடினோரும் உண்டு!
இதன் அருமை அறியாமலே
சூடுபட்டோரும் உண்டு!
ஒரே மொழியின்,
ஒலியில்லா உருவின்,
காரணம் நூறு
அது செய்யும் காரியம் நூறு!
கண்களின் வழியே
இதயங்கள் பேச,
அந்த காதலரின் காதல் மொழி மௌனம்!
மனமுருகி
இறைவனிடம் சரண்புக,
அந்த பக்தனின் பக்தி மொழி மௌனம்!
ஊடல்கள் தகர்ந்து
கூடல்கள் தேடும்,
அது செய்யும் காரியம் நூறு!
கண்களின் வழியே
இதயங்கள் பேச,
அந்த காதலரின் காதல் மொழி மௌனம்!
மனமுருகி
இறைவனிடம் சரண்புக,
அந்த பக்தனின் பக்தி மொழி மௌனம்!
ஊடல்கள் தகர்ந்து
கூடல்கள் தேடும்,
அந்த ஜோடியின் ஆசை மொழி மௌனம்!
இயற்கையின் எழிலில்
தன்னை மறந்த,
அந்த ரசிகனின் ரசனை மொழி மௌனம்!
கோபத்தின் கொடுங்கோலை
தணிக்கின்ற மருந்தாய்,
இயற்கையின் எழிலில்
தன்னை மறந்த,
அந்த ரசிகனின் ரசனை மொழி மௌனம்!
கோபத்தின் கொடுங்கோலை
தணிக்கின்ற மருந்தாய்,
அந்த சான்றோனின் ஞான மொழி மௌனம்!
சொற்களால் உடையாத
மனங்கள் கூட
சிறு மௌனத்தால் உடைந்ததுண்டு
பல மொழிகளை
கற்றறிந்தவரிடம் கூட,
மௌனத்திற்கு மொழிபெயர்ப்பு இல்லை!
சில நேரங்களில்,
சில மனிதர்களின்,
சொற்களால் உடையாத
மனங்கள் கூட
சிறு மௌனத்தால் உடைந்ததுண்டு
பல மொழிகளை
கற்றறிந்தவரிடம் கூட,
மௌனத்திற்கு மொழிபெயர்ப்பு இல்லை!
சில நேரங்களில்,
சில மனிதர்களின்,
சிறு மெளனங்கள்,
பெரும் புதிர்கள்!
மௌனத்தை
விடையாய்த்தந்து
விலகிச் சென்ற காதலி போல,
மௌனத்தை
இறுதியில் பேசி
நோயில் கரைந்த உறவைப்போல,
மௌனத்தை
ஆயுதமாய்க் கொண்டு
பகையில் மறைந்த நட்பைப் போல,
மௌனத்தை
போர்வையாய்க்கொண்டு
தொண்டனை மறந்த தலைவனைப் போல,
இந்த மௌனம்
பலரை
வாழவும்வைத்தது!
வீழவும்வைத்தது!
தனிமையும்,
விடையாய்த்தந்து
விலகிச் சென்ற காதலி போல,
மௌனத்தை
இறுதியில் பேசி
நோயில் கரைந்த உறவைப்போல,
மௌனத்தை
ஆயுதமாய்க் கொண்டு
பகையில் மறைந்த நட்பைப் போல,
மௌனத்தை
போர்வையாய்க்கொண்டு
தொண்டனை மறந்த தலைவனைப் போல,
இந்த மௌனம்
பலரை
வாழவும்வைத்தது!
வீழவும்வைத்தது!
தனிமையும்,
அது சூழ்ந்த மெளனங்கள்,
பல படைப்பிற்குவித்தானது
பல அறிவிற்கு
விளக்கானது
பல யோகத்தின்
வழிசெய்தது
பல மோகத்தின்
தாழிட்டது
பல கோபத்தின்
வாய்ப்பூட்டியது
பல சோகத்தின்
மனம் தேற்றியது!
மௌனம் மட்டுமே
அனைத்து உயிரும்
ஓதும் உலக மொழியானது!
No comments:
Post a Comment