உலகம் தொலைவாகும்
வெறும் தனிமை துணையாகும்
வழிமேல் விழி வாடும்
என் நிழலும் உன்னை தேடும்
வெறும் தனிமை துணையாகும்
வழிமேல் விழி வாடும்
என் நிழலும் உன்னை தேடும்
பொத்திவச்ச நேசமெல்லாம்
சொல்லத்தானே வாய்ப்பும் இல்லை
கொட்டிவச்ச ஆசையெல்லாம்
நெஞ்சோடு மடியுது மெல்ல
சொல்லத்தானே வாய்ப்பும் இல்லை
கொட்டிவச்ச ஆசையெல்லாம்
நெஞ்சோடு மடியுது மெல்ல
அழுது கரைச்சாலும்
என் கனவை தொலைச்சாலும்
நெஞ்சம் செதஞ்சாலும்
என் நேசம் கொறையாது!
என் கனவை தொலைச்சாலும்
நெஞ்சம் செதஞ்சாலும்
என் நேசம் கொறையாது!
நதிமேல் தவழ்ந்தோடும்
வழி மறந்த இலைபோல
என் பாதை மறந்தாச்சு
வெறும் காதல் துணையாச்சு
வழி மறந்த இலைபோல
என் பாதை மறந்தாச்சு
வெறும் காதல் துணையாச்சு
கிழக்கே உதிச்சாலும்
என் கிழக்கு விடியாது
உலகம் உருண்டாலும்
என் மனசு நகராது
என் கிழக்கு விடியாது
உலகம் உருண்டாலும்
என் மனசு நகராது
தண்ணீரிலா எழுதிவச்ச
நீ கொடுத்த சத்தியத்தை?
கண்ணீருக்கே வாக்கப்பட்டு
பெத்தெடுத்தேன் பரிதவிப்ப
நீ கொடுத்த சத்தியத்தை?
கண்ணீருக்கே வாக்கப்பட்டு
பெத்தெடுத்தேன் பரிதவிப்ப
கொடுக்கும் சாமியெல்லாம்
இப்போ கைகட்டி நின்னதுவோ!
காதல் காட்டுக்குள்ள
என் கண்கட்டி விட்டதுவோ!
இப்போ கைகட்டி நின்னதுவோ!
காதல் காட்டுக்குள்ள
என் கண்கட்டி விட்டதுவோ!
பூவெடுத்து மாலைசெஞ்சு
தீயிட்டு திரிச்சது ஏனோ!
சந்தனமும் குங்குமமும்
கரியோடு கலந்ததும் ஏனோ!
தீயிட்டு திரிச்சது ஏனோ!
சந்தனமும் குங்குமமும்
கரியோடு கலந்ததும் ஏனோ!
தங்கத்தாலி செஞ்சுவச்சேன்
பித்தளையா போனதுவே!
உயிரோவியம் தீட்டிவச்சேன்
செங்கரையான் அரிச்சதுவே!
பித்தளையா போனதுவே!
உயிரோவியம் தீட்டிவச்சேன்
செங்கரையான் அரிச்சதுவே!
உயிரும் கரையிது மெல்ல
ஆவியும் நீங்கிச்செல்ல
இமைரெண்டும் மூடும் முன்ன
இறுதியாப் பார்க்கணும் உன்ன!!
ஆவியும் நீங்கிச்செல்ல
இமைரெண்டும் மூடும் முன்ன
இறுதியாப் பார்க்கணும் உன்ன!!
No comments:
Post a Comment