படர்ந்த பிரபஞ்சத்தில்
ஒரு துகளாய் பூவுலகம்!
விரிந்த பூவுலகில்
சிறு துகளாய் சிறுவன் நான்!
சிறுவன் என்னுள்ளே
இப்பிரபஞ்சம் அடங்கிடுமோ?
பிரபஞ்சப்பொருளனைத்தும்
என்னிடமே தொடங்கிடுமோ?!
இறைவனின் புதிர்தானோ
விடையறிய பிறந்தேனோ!?
புதிரைப்புரிதலிலே,
காலம் கடந்தனவே!
விடையை அடைந்திடவே
காலனும் ஒப்பலயே!!
கண்ணாமூச்சி ஆட்டமாடி
மீண்டும் அதே பிறப்புகொண்டு
பூவனத்தை சுற்றிவரும்
வண்ணத்துப்பூச்சி போல
பூவுலகை சுற்றிடுமே
ஒழியாது ஆவி என்றும்
விடைத்தேட எத்தணித்தும்
இடர் வந்து வழிமறிக்க
துயர் தாண்டி தேடிடுவாய்
பிறவாமல் ஒடிங்கிடுவாய்!!!
No comments:
Post a Comment