மழையே!
அமுது மழையே!
கீழே விரைந்த நீ
என் தலைமேலே
உறைந்ததேனோ?
என் மீது பொழிவாயோ?
இல்லை வந்தவழி செல்வாயோ?
------------
மனமெனும் ஜன்னலில்
அவ்வப்போது எட்டிப்பார்க்கும்
முதல் காதல்!!
மறந்திடவும் முடியவில்லை!
மறைத்திடவும் முடியவில்லை!
கால வெள்ளத்தில்
வாழ்வு கரைந்தாலும்,
கொண்ட காதலை,
நெஞ்சு தொலைக்கவில்லை!!
----------
கிளைமேலே கொஞ்சும்
கிளி இரண்டைக் கண்டாயா?
தன்னை மறந்து
உலகை மறந்து
காதல் செய்வதைப் பார்த்தாயா?
நீயும் எந்தன்
கொஞ்சும் கிளியடி!
உண்மை மறந்து
துன்பம் மறந்து
காதல் பாடம் சொல்வாயா?
----------------------
பூக்களுக்கும் தீபிடித்ததடி
நந்தவனம் சேதமானதடி
நிலவும் பிளந்து உடைந்ததடி
நீல வானம் கருகிப்போனதடி
குயில்களெல்லாம் அழுவுதடி
தென்றலும் நின்றுபோனதடி
நீ விலகிச்சென்றதினால்,
என் உயிரும் உடலை நீக்குதடி!!
------------------
நீ பிரிந்து சென்றாயே
எனை மறந்து சென்றாயே
தொலைவிலே உன் அவளோடு,
சுக வாழ்வு வாழ்வாயே!
பேதை என் நெஞ்சம் தான்
கண்ட கனா களைந்ததுவே
உயிரிலே தொடுத்த காதல்
என் உயிர் பறித்து சென்றதுவே!!
-----------------
No comments:
Post a Comment