சில்லிட்டுப் போன
இரவின் மத்தியில்
காதோரம் தொட்டுப் படரும்
உனது மூச்சின் வெப்பங்கள்…
துவண்ட விழிகளுக்குள்
எட்டிப் பார்த்து மனம் படித்து
நெற்றி வழி உயிர் நனைக்கும்
உனது எச்சிற் முத்தங்கள்…
தலைக் கோதி
கன்னம் தடவி
இறுகக் கட்டிக்கொண்டு அரணாகிடும்
உனது விரல்களின் தொடுதல்கள்…
நொடி தொலைந்து
மனம் தொலைந்து
நான் மூழ்கித் தவித்த
உன் அன்பின் அமைதி ஆர்ப்பாட்டங்கள்
உறைந்து போன சித்திர நொடிகள்!
- அர்ச்சனா நித்தியானந்தம்
No comments:
Post a Comment