ந என்னைக் கடந்தது போல்
நான் காதலைக் கடக்கவில்லை
காணும் திசைகளில் எங்கு தேடியும்
கானலாய் நீ கிடைக்கவில்லை
கோர்த்த விரல்களை
நீ பிரித்துச் செல்கையில்
என் ஆயுள் ரேகையை
அழித்துச் சென்றாய்…
சேர்த்த நினைவுகளின்
ஈரம் மறையும் முன்
என் கண்ணோரம் நீர்த்துளியைக்
கொடுத்துச் சென்றாய்…
சிரிப்பிற்குள் சிதைந்துபோன
மனதை மறைத்திடவா?!!
உயிருக்குள் ஊன்றிப்போன
நினைவை மறந்திடவா?!!
ஏதேதோ பயணம்
காலம் அழைத்துச் சென்றாலும்
முடியாமல் தொடர்ந்திருக்கும்
உன்மேல் காதல் எந்நாளும்!!!
No comments:
Post a Comment