Wednesday, 18 November 2015

புலம்பல்

வளைஞ்சு வளைஞ்சு,
ஒடஞ்சு போனேன்!
குட்ட குட்ட,
குனிஞ்சு போனேன்!
ஒதுக்க ஒதுக்க,
தொலைஞ்சு போனேன்!
மிதிக்க மிதிக்க,
மண்ணாப் போனேன்!

நிலையற்ற வாழ்கையில
கூத்தாடும் மனுஷனுக்கு,
புத்தியில யுக்தியில்ல!
மனசுலயும் சக்தியில்ல!!

குறுகி குறுகி
சுருங்கிய மனசு,
அத்தனைக்கும் ஆசைப்பட்டு,
பித்தனைப்போல் புலம்புதடி!
மருகி மருகி
கனத்த மூச்சு,
நெஞ்சுக்குள் அடைபட்டு,
நிம்மதியை தொலைத்ததடி!

என்ன படச்ச சிவனே,
போதுமையா உன் பூலோகம்!
நீ படச்சதுல உன்ன கண்டேன்,
எனக்குள்ளேயும் நீ இருப்பத
மற்றவைக்கு உரைக்கலையோ??
என் கண்ண கட்டி,
காட்டுல விட்டு,
வேடிக்கை பார்க்கும்
ஈசனே!
விடையறியா வாழ்க்கைக்கு,
விளக்கம்தான் தருவாயோ?
பசுவுக்கு பிறப்பெதற்கு?
மும்மலத்தின் பிடி எதற்கு?
அள்ளிக்கொண்டு சடையினிலே,

முடிந்துகொள்ள கூடாதா?!

No comments:

Post a Comment