கம்பன் வீட்டுக்
கட்டுத்தறியும் கவிபாடும்,
அதுபோல,
என் வீட்டுப்
பசுங்கன்றும் கவிபாடும்,
கட்டுத்தறியும் கவிபாடும்,
அதுபோல,
என் வீட்டுப்
பசுங்கன்றும் கவிபாடும்,
உன்னைக் கண்டால்!
-------------
காதலுக்கு கண்ணில்லை,
ஆனால்,
ஆனால்,
கண்கள் ஆயிரம் கதை பேசும்,
காதலில்!
காதலில்!
-------------
தூரலில் முடிந்தவரை,
திரியை கவ்வும் சுடர் போல,
காதலில் இறுதிவரை,
உன்னைப் பற்றும் மனம்!
திரியை கவ்வும் சுடர் போல,
காதலில் இறுதிவரை,
உன்னைப் பற்றும் மனம்!
-------------
நீ வீசும்
வெப்பப் பார்வையில் கூட,
என் மனம்
குளிர்ந்ததடி!
வெப்பப் பார்வையில் கூட,
என் மனம்
குளிர்ந்ததடி!
-------------
பித்தனாய்,
உன் பக்தனாய்,
பெரும் சித்தனாய்,
எனை மாற்றினாய்!
உன் பக்தனாய்,
பெரும் சித்தனாய்,
எனை மாற்றினாய்!
-------------
கடலில் விடுத்த
கட்டுமரமாய்,
காதலில் விழுந்து
தொலைகிறேன்!
கட்டுமரமாய்,
காதலில் விழுந்து
தொலைகிறேன்!
--------------
ஆதவனைக் கண்டு
அவிழும் மலராய்,
உன்னைக் கண்டு
உயிர் பெறுகிறேன்!
ஆதவனைக் கண்டு
அவிழும் மலராய்,
உன்னைக் கண்டு
உயிர் பெறுகிறேன்!
---------------
பிரசவிக்கப் பிறந்தேன்,
பிரசவித்ததும் மரித்தேன்!
நான், மேகம்!
என் குழந்தை, மழை!
பிரசவித்ததும் மரித்தேன்!
நான், மேகம்!
என் குழந்தை, மழை!
------------------
உன் கலாவதி நான்!
எனக்கு காலாவதி உண்டு,
என் காதலுக்கு இல்லை!
எனக்கு காலாவதி உண்டு,
என் காதலுக்கு இல்லை!
-------------------
மரித்தாலும் பிறப்பேன்,
உன்னை காதல் செய்ய!
பிறந்தாலும் மரிப்பேன்,
உன் காதலை வெல்ல!
உன்னை காதல் செய்ய!
பிறந்தாலும் மரிப்பேன்,
உன் காதலை வெல்ல!
---------------------
No comments:
Post a Comment