Saturday, 28 November 2015

மனிதம்

அறியாத பிறப்பு
புரியாத இறப்பு
விளங்காத வாழ்க்கை
விலங்காய் யாக்கை!

தங்கத்தைத் தேடி
தத்துவங்கள் மறந்து
துன்பத்தில் உழன்று
துடிக்கின்ற நெஞ்சம்!

வலக்கை சுரண்ட
இடக்கை கொடுக்க
கடவுளை ஏமாற்றுவதாய்
தன்னையே ஏமாற்றினான்!

விண்ணைக்கிழித்து
மண்ணைப் பிளந்து
நீரைத் தொலைத்து
நாகரீகம் பேசும்!

காற்றைக் கெடுத்து
மரத்தைப் புதைத்து
கழிவினை உண்டு
பகுத்தறிவு வேஷம்!

பிணக்குவியல் பரப்பி
பூச்செடிகள் நட்டு
கடவுளைத் தேடி
கவி பாடும் கூட்டம்!

சுந்தரராய் தேகம்
சுகம் அடங்கா மோகம்
மாதாவை வணங்கி
மாதரை வதைக்கும்!

கொண்டுவரவும் இல்லை
எடுத்துச்செல்வதும் இல்லை
மாயையான வாழ்விற்கு
மந்தைகளாய் மயங்கும்!

No comments:

Post a Comment