திருமணம் எனும் பந்தத்தில் இரு மனங்கள் இணைந்து, உறவாடி, ஒவ்வொரு நிமிடங்களிலும், அதன் ஒவ்வொரு நொடிகளிலும் புரிதல் எனும் பொக்கிஷத்தை வேட்கையோடு தேடி, பல சமயங்களில் மனம் களித்து, சில சமயங்களில் மனம் கசந்து, 'அவள் அப்படித்தான்' என்றும், 'அவர் அப்படித்தான்' என்றும், இருவரும் ஒரு பரஸ்பர நிலைப்பாட்டில் ஒத்துணர்ந்து வாழும் வாழ்க்கையில் தான் எத்தனை அலாதி இன்பம்!!
நேற்று நான் அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் அவள் அவளுக்குப் பிடித்த மெகா சீரியலில் லயித்திருந்தாள். அவள் எதிரே சென்று நின்ற என்னைக் கண்டு இரு புருவங்களையும் உயர்த்தி நோக்கினாள். இந்த ஒரு சிமிஞை போதும் அவள் மனதை நான் படிக்க. குடுகுடுவென அடுக்களைக்குள் ஓடிச்சென்று இஞ்சி, ஏலக்காய் நசுக்கிப்போட்டு, சுடச்சுட டீ எடுத்து வந்து அவளிடம் நீட்டினேன். ஒரு மிடறு பருகியவளின் இதழோரத்தில் சிறு முறுவல். 'சக்ஸஸ்! ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்!!' என்று கத்த வேண்டும் போல் இருந்தது. ஓர் வார்த்தை கூட இருவரும் பேசவில்லை. ஆனால் எங்களின் பார்வையும், முகபாவமும் இருவரின் மனதையும் படம் பிடித்துக்காட்டின.
அன்றொரு நாள், வழக்கத்திற்கு மாறாக நான் தாமதமாக வீடு திரும்பினேன். சோர்ந்து சோபாவில் சரிந்த என்னைக் கண்டவள் உள்ளே சென்றுவிட்டாள். பசி மயக்கத்தில், உடல் அசதியில், கண்கள் சுழட்டிக்கொண்டு வந்தன. திடீரென ஓர் மணம் என் நாசி துளைத்து உயிரைத் தீண்டியது. விழித்துப்பார்க்கையில் என் எதிரே மேஜையில் சிக்கன் பிரியாணி, ஸ்விகி புண்ணியத்தில். ஆர்வமாக உண்ணத் தொடங்க, குஸ்கா மட்டுமே எஞ்சியிருப்பதைக் கண்டு அவளை நோக்கினேன். மூக்கின் மேல் சரிந்திருந்த மூக்குகண்ணாடியை உயர்த்திப் போட்டு என்னை நோக்கினாள். ஆபத்திற்கு பாவமில்லை என்று எச்சிற் கையாலேயே வணக்கம் வைத்துவிட்டு, உண்டு முடித்தேன். அப்பொழுதும், இருவரும் ஒற்றை வார்த்தை பேசவில்லை.
இந்தப் புரிதல் அனைத்து நேரங்களிலும் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. சில தினங்களுக்கு முன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய என்னை மூக்குக்கண்ணாடி வழியே கூர்மையாய் நோக்கினாள். மின் விசிறி வேலை செய்தபொழுதும், கையில் ஒரு தாளால் விசிறிக்கொண்டிருந்தாள். ஒன்றும் புரியாமல் என் அறைக்குள் செல்ல நான் எத்தனிக்க, பறந்து வந்து என் பின் தலையில் பட்டு, கீழே விழுந்து நசுங்கி, உருண்டுகொண்டிருந்தது எவர்சில்வர் சொம்பு. அப்பொழுது நினைவிற்கு வந்தது அவளுடைய சித்தப்பா மகள் திருமண பரிசாக அவள் வாங்கிவரச் சொன்ன வெள்ளி சொம்பை நான் மறந்துவிட்டேன் என்று. புடைத்துப் போன என் மண்டையை ஐஸ் பேக் கொண்டு ஆத்திய பின்பு தான் புரிந்தது, சற்றுமுன் அவள் விசிறிக்கொண்டிருந்தது அந்தத் திருமண அழைப்பிதழைக் கொண்டு தான் என்றும் தற்காலிகமாக என் புரிதல் செயலிழந்திருந்தது என்றும். நான் சுதாரித்திருந்தால் உடனே கடைக்கு ஓடியிருப்பேன், சொம்பு தப்பித்திருக்கும். அப்பொழுதும் ஒற்றை வார்த்தை கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஏனென்றால், புரிதல் எனும் வாழ்நாள் தேடல், சொல்லி உணர்வதில்லை, சொல்லாமல் அறிவது!!

No comments:
Post a Comment