முத்து போல் பளீரென்ற சிரிப்புடன்
காலை, கட்டித் தழுவி சென்றது
அலைகள் மட்டுமல்ல
அவன் நினைவுகளும்!!!
அழகிய வான், கடலைத் தொடும் அழகை ,
பளிச்சிடும் நிலவு அலங்கரிப்பதைப் போல் ,
மனதின் இருளில் ஒளியாய் அவன்!!!
இன்றோ மேகத்தின் மோகத்தில் அவ்வெண்ணிலவு மூழ்க ,
இருளில் திசை இன்றி, துள்ளித்திரியும் நண்டாய் தள்ளாடியது மனம் !!!
வெள்ளை சிரிப்போடு தினமும் காத்திருந்த அமைதியான அலையோ ,
மேகம் கலைந்த முழு நிலவைக் கண்டதும் ,
ஆர்ப்பரித்து, அரவணைத்து, துள்ளித் தாவி கொண்டாடியது , இன்றொரு நாள் மட்டுமே இவ்வொளி என்று அறியாமல் !!
கரை மேல் கொண்ட கரையாத காதலுடன், வானின் வெண்ணிலவிற்காக ,
வெண்சிரிப்போடு கேள்விக்குறியுடன் காத்திருக்கும் அலையாய் என் மனம் இங்கே....
Arumai..!!
ReplyDelete