Thursday, 2 November 2017

எழுதுகிறேன்

எழுதுகிறேன்!
நிதர்சனம் மறக்க
எழுதுகிறேன்
மதி மயங்க
எழுதுகிறேன்
உலகைத் துறக்க
எழுதுகிறேன்
புது பயணம் செய்ய
எழுதுகிறேன்
மொழிமேல் காதலால்
எழுதுகிறேன்
மனதின் ஆவலால்
எழுதுகிறேன்
கனவின் வடிவாய்
எழுதுகிறேன்
உணர்வின் திரையாய்
எழுதுகிறேன்
கடந்து சென்றதை
எழுதுகிறேன்
ஏக்கத்தின் வடிகாலாய்
எழுதுகிறேன்
நித்திரையைப் புறந்தள்ளி
எழுதுகிறேன்
நித்தியமாய் நின்றிட
எழுதுகிறேன்!!!

No comments:

Post a Comment