முத்தின கத்திரிக்காயை
கொழ கொழனு கொழும்பு வச்சு
அவிஞ்ச அவரக்காயில
புளி சேத்து கூட்டு செஞ்சு
அப்பளத்த ரெண்டா வெட்டி
செவ செவ’னு வறுத்து வச்சு
அரிசிய உலையில போட்டு
கொதிக்கவிட்டு கூழாக்கி
தட்டுல அள்ளிப்போட்டு
அத்தானுக்கு நான் கொடுக்க
கடைசி சொட்டு வரை
சப்புகொட்டி தின்னுபுட்டு
ஈ’னு இளிச்சுப்புட்டு
வளவி வாங்க போனீரே
சட்டியில மிஞ்சியத
வாயில் அள்ளி போடயில
கொடலு பிரட்டி வாந்திவர
அள்ளி நாய்க்கு வச்சுபுட்டேன்
மோந்து மோந்து பாத்துபுட்டு
கொலச்சுகிட்டே அது ஓடிடுச்சு
காதலில கண்ண தொலைச்சவரே,
உங்க நாக்கையும் எங்க தொலைச்சீரோ??
No comments:
Post a Comment