Wednesday, 29 November 2017

ஆறாது நெஞ்சம்

நேசம் கூட
விஷமாய்ப் போகும்
நெஞ்சை அறுத்து
சுடுகாடாக்கும்
சொல்லாமல் வைத்த செடி
விருட்சமாய் மாறும்
அதன் வேரே கழுத்தைப்பற்றி
சுருக்குக்கயிராகும்
மறந்து மறந்து ஓடியும்
கண்முன்னே நிற்கும்
துறந்து திரிய எத்தணித்தும்
மனம் அசையாது வாடும்


சொல்லிடவும் வழியில்லை
பின்னே சென்றிடவும் வழியில்லை
வெகு வேகமாக ஓடிச்சென்று
ஜென்மம் நிறைத்திடவும் வழியில்லை
அய்யோ இன்னும் எத்தனை காலம்தான்
வலியும் வேதனையும் உடன் வருமோ
பொய் தான் என்று அறிந்தபோதிலும்
மனம் கொண்ட துயருக்கு மருந்தில்லையோ


முன்னும் பின்னுமாக
வாழும் நொடிகளும்
குற்ற உணர்வோடு
இழந்த வலிகளும்
சற்றும் நினையாது
புரண்டோடிய காலமும்
சுற்றி சுற்றி
சிறை வைத்தனவே


புண்பட்டதற்கே
பேனா முனை நட்பு
எழுதி எழுதி
ஓய்ந்தபின்னும்
ஆறவில்லை நெஞ்சம்
பேனா முனை
தேய்ந்தபின்னும்
தேயவில்லை எண்ணம்!!

No comments:

Post a Comment