காலம் என்றொரு
காலன் இல்லாவிடில்,
காயம்கொண்ட உயிரணைத்தும்
காணாமல் போய்விடுமே
காலமே,
மெல்ல மெல்ல
நினைவுகளைப் பழுதாக்கி
சொல்ல முடியாத
வலிகளை இலகுவாக்கி
மீள முடியாத
துக்கத்தைத் துரும்பாக்கி
செல்ல செல்ல
வழியைப் புதுப்பிக்கும்
காலம்,
தனது ஜாலத்தினால்
பல மாற்றத்தைத் தந்து
சீற்றத்தின் தோற்றத்தை
சாந்திப் படுத்தும்
உலகத்தில் ஒவ்வொன்றும்
பரிணாமம் கொண்டாலும்
மாற்றத்தைத் துறந்த
நித்தியமே, காலம்!!!
No comments:
Post a Comment