Sunday, 10 December 2017

அவளால்

தரிசாய்ப் போன
என் மனதில்
சிறிதாய் ஒரு பூ
பூத்ததே!
என்னவென்று நான்
அறியும் முன்னே
என் மனம் சோலையாய்
ஆனதே!
மரித்துப் போன
உணர்வுகள் அனைத்தும்
உயிர் கொண்டு மீண்டும்
துளிர்த்ததே!
மறந்து போன
ஆனந்தப் புன்னகை
என் இதழில் வந்து
சேர்ந்ததே!
யாரால்? எவரால்
இத்தனை மாற்றம்?
கேள்விகள் என்னை
சூழ்ந்ததே
கண்ணில் விழுந்த
என் கண்மணி அவளால்
மறுபிறப்பு எனக்கு
நேர்ந்ததே!!!

No comments:

Post a Comment