Friday, 15 December 2017

நான்

உன் மனமெனும் மாய ஊஞ்சலில்
தினம் ஆடும் முழு நிலவு நான்
உன் விழிகொண்ட வேட்கைத் தீர்த்திடும்
தூய கங்கையின் குமிழி நான்
கரைகடந்த உன் கனவுகளின்
நிலைபெயரா மகுடம் நான்
நிதம் துடிக்கும் நெஞ்சத்தின்
அவிழ்ந்த நித்தியக் கமலம் நான்
பிழையும் சரியுமான உன் எண்ணத்தின்
பிம்பக் குவியலின் உண்மை நான்
உன் கூடு சுமந்திடும் உயிருள்
தூய சோதியின் வெப்பம் நான்
உன்னுள் வாழ்ந்திடும் பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு அணுவின் அசைவும் நான்
இமைக்கும் நொடிபோன்ற வாழ்வினில்
நொடியின் கூறுகள் அனைத்தும் நான்!!!

No comments:

Post a Comment