அழகான பதுமை என
நானில்லை
கயல் போன்ற விழியிரண்டு
எனக்கில்லை
தங்கமென மின்னிடும்
மேனியில்லை
கவிதை பொழிந்திடும்
மொழியில்லை
அழகான மனமொன்று
எனக்குண்டு
கடல் போன்று அன்பு
அதிலுண்டு
தங்கமென உனைத்தாங்கிட
ஆசையுண்டு
கல்லறைவரை என் காதல்
உனக்குண்டு!!!
No comments:
Post a Comment