Saturday, 16 December 2017

உனக்காக

இனி நெஞ்சில் மழைக்காலம்
குடை ஒன்று நீ தாராயோ?!
பறந்திட சிறகுகள் விரியுதே
என்னுடன் நீயும் வாராயோ?!

உன் விழி விரியும் வழி தோறும்
நான் மலர்ந்திட மாட்டேனோ?!
உன் நினைவின் அலைகளில்
நான் நுரையாகிப் போவேனோ?!

சிரித்தாலும் சிதைந்தாலும்
உன் அருகாமை அது போதும்
மதி மயங்கும் வேளையிலே
தலைகோதும் உன் விரல் போதும்

தீண்டும் கண்களின் ஸ்பரிசத்தால்
என்னுள்ளே வெப்பம் படறாதோ?!
மௌனமாய் சொன்ன மொழியெல்லாம்
என் உள்ளம்தான் உணராதோ?!

இருவர் நெஞ்சும் கருவறையாய்
நேசம் தன்னை சுமந்திடுமே!
ஆயுட்காலம் நீளும் வரை
காதல்கருவைக் காத்திடுமே!!!

No comments:

Post a Comment