1. காதல் கருவறை
-----------------------------------
தாயின் கருவறையில் விழுந்த உயிர்த்துளியாய்,
உன் காதல் கருவறையில் நான் விழுந்தேன்!
ஈரைந்து மாதங்களில் பெற்றெடுக்க,
நான் சாதாரண குழந்தை அல்ல!
ஆயிரம் யுகங்கள் ஆனாலும்,
உன்னுள்ளே தரித்து, வாழ்ந்து, மரித்துப் போகும்,
உன் அசாதாரண காதலி!!!
2. ஆசை
----------------
கண்களுக்குள் உன் பிம்பங்களை வைத்திட,
பிறகு விழிகளைத் தைத்திட ஆசை!
செவிகளுக்குள் உன் பெயரினைப் பொழிந்திட,
பிறகு அவற்றை மூடிட ஆசை!
நெஞ்சுக்குள் உன் நினைவினை நிரப்பிட,
பிறகு கனவினில் தவழ்ந்திட ஆசை!
இதழ்களால் உன் முகத்தினை நனைத்திட,
பிறகு உன் மடியில் சரிந்திட ஆசை!!!
3. ஆசைகள் கோடி
---------------------------------
உன் தோளினில் சாய்ந்திட,
மழையை ரசித்திட,
ஆசை!
உன் கையினைப் பற்றிட,
நீண்ட சாலையில் நடந்திட,
ஆசை!
உன் அருகில் அமர்ந்திட,
தேநீரின் இறுதித் துளி வரை பகிர்ந்திட,
ஆசை!
உன் கண்களைக் கண்டிட,
நம் காதல் கதைகளை நினைவுகூர,
ஆசை!
உன் சங்கதிகளைக் கேட்டிட,
இரவு உணவு அருந்திட,
ஆசை!
உன் மீது சாய்ந்திட,
முற்றத்து ஊஞ்சலில் கண்மூடி ஆடிட,
ஆசை!
உன் பின்னால் நடந்திட,
கோவில் சென்று உனக்காக வேண்டிட,
ஆசை!
ஆசைகளோ கோடானுகோடி,
உன்னிடம் நான் உரைத்ததோ, அவற்றுள் ஒரு துளி!!!
4. காதல் கவிதை - டி.ஆர். ஸ்டைல்
--------------------------------------------------------------
நித்தம் ஒரு சத்தம்,
அவை எல்லாம் என் முத்தம்!
காலில் சிணுங்கும் கொலுசு,
அதில் குழையும் என் மனசு!
கொத்து மலர்களாம் முகம்,
அதை பார்த்திருப்பதே சுகம்!
கொஞ்சி விளையாடும் வண்டுகள்,
நான் கொஞ்சும் உன் கண்கள்!
ஏ டண்டனக்க ஏ டணக்குணக்கா!!!
-----------------------------------
தாயின் கருவறையில் விழுந்த உயிர்த்துளியாய்,
உன் காதல் கருவறையில் நான் விழுந்தேன்!
ஈரைந்து மாதங்களில் பெற்றெடுக்க,
நான் சாதாரண குழந்தை அல்ல!
ஆயிரம் யுகங்கள் ஆனாலும்,
உன்னுள்ளே தரித்து, வாழ்ந்து, மரித்துப் போகும்,
உன் அசாதாரண காதலி!!!
2. ஆசை
----------------
கண்களுக்குள் உன் பிம்பங்களை வைத்திட,
பிறகு விழிகளைத் தைத்திட ஆசை!
செவிகளுக்குள் உன் பெயரினைப் பொழிந்திட,
பிறகு அவற்றை மூடிட ஆசை!
நெஞ்சுக்குள் உன் நினைவினை நிரப்பிட,
பிறகு கனவினில் தவழ்ந்திட ஆசை!
இதழ்களால் உன் முகத்தினை நனைத்திட,
பிறகு உன் மடியில் சரிந்திட ஆசை!!!
3. ஆசைகள் கோடி
---------------------------------
உன் தோளினில் சாய்ந்திட,
மழையை ரசித்திட,
ஆசை!
உன் கையினைப் பற்றிட,
நீண்ட சாலையில் நடந்திட,
ஆசை!
உன் அருகில் அமர்ந்திட,
தேநீரின் இறுதித் துளி வரை பகிர்ந்திட,
ஆசை!
உன் கண்களைக் கண்டிட,
நம் காதல் கதைகளை நினைவுகூர,
ஆசை!
உன் சங்கதிகளைக் கேட்டிட,
இரவு உணவு அருந்திட,
ஆசை!
உன் மீது சாய்ந்திட,
முற்றத்து ஊஞ்சலில் கண்மூடி ஆடிட,
ஆசை!
உன் பின்னால் நடந்திட,
கோவில் சென்று உனக்காக வேண்டிட,
ஆசை!
ஆசைகளோ கோடானுகோடி,
உன்னிடம் நான் உரைத்ததோ, அவற்றுள் ஒரு துளி!!!
4. காதல் கவிதை - டி.ஆர். ஸ்டைல்
--------------------------------------------------------------
நித்தம் ஒரு சத்தம்,
அவை எல்லாம் என் முத்தம்!
காலில் சிணுங்கும் கொலுசு,
அதில் குழையும் என் மனசு!
கொத்து மலர்களாம் முகம்,
அதை பார்த்திருப்பதே சுகம்!
கொஞ்சி விளையாடும் வண்டுகள்,
நான் கொஞ்சும் உன் கண்கள்!
ஏ டண்டனக்க ஏ டணக்குணக்கா!!!
No comments:
Post a Comment