என்னை நீ அறிவாயோ?
நான் அறியேன்!
ஆனால்,
உன் ஒளி தவிர,
இவ்வுலகனைத்தும்
எனக்கு மங்கியது!
உன் மௌனங்கள் போதும்.
எனக்குப் பிடித்த அர்த்தங்களை,
நான் வகுத்துக் கொள்வேன்!
உன் எதேச்சைப் புன்னகை போதும்.
அது எனக்குதான் என்று,
நான் மகிழ்ச்சி கொள்வேன்!
நீ ஒரு முறை என் பெயரைக் கூறினால்,
அதுவே ஆயிரம் முறை
என் காதுகளில் எதிரொலிக்கும்!
உன்னைக் காணும் தருணங்கள்,
என் மங்கள காலங்கள்!
உன்னைக்காணா ஏக்கங்கள்,
என் மோன நிலைகள்!!
என் மானசீக வாழ்வின்
மனோன்மணி நீ!
மனம் புனையும் புரியாப்போரின்,
பராக்ரமத் தலைவன் நீ!!
என் காதலை,
அது தரும் காயங்களை,
அது கொடுக்கும் கிளர்ச்சியை,
உன்னிடம் ஒப்பிக்க ஆசை.
ஆனால்,
நாணம் நாவினைக் கட்டிப்போட்டது.
இதனை அறியாமலே இருப்பாயோ?
அறிந்தும்,
சொல்லத் தெரியாமலே இருப்பாயோ?
கடலில் மூழ்கும் கல்லென,
தொலைந்து கொண்டிருக்கிறேன்.
உன் காதலை ஒற்றுக்கொண்டு,
என்னைக் காப்பாற்று!!
நான் அறியேன்!
ஆனால்,
உன் ஒளி தவிர,
இவ்வுலகனைத்தும்
எனக்கு மங்கியது!
உன் மௌனங்கள் போதும்.
எனக்குப் பிடித்த அர்த்தங்களை,
நான் வகுத்துக் கொள்வேன்!
உன் எதேச்சைப் புன்னகை போதும்.
அது எனக்குதான் என்று,
நான் மகிழ்ச்சி கொள்வேன்!
நீ ஒரு முறை என் பெயரைக் கூறினால்,
அதுவே ஆயிரம் முறை
என் காதுகளில் எதிரொலிக்கும்!
உன்னைக் காணும் தருணங்கள்,
என் மங்கள காலங்கள்!
உன்னைக்காணா ஏக்கங்கள்,
என் மோன நிலைகள்!!
என் மானசீக வாழ்வின்
மனோன்மணி நீ!
மனம் புனையும் புரியாப்போரின்,
பராக்ரமத் தலைவன் நீ!!
என் காதலை,
அது தரும் காயங்களை,
அது கொடுக்கும் கிளர்ச்சியை,
உன்னிடம் ஒப்பிக்க ஆசை.
ஆனால்,
நாணம் நாவினைக் கட்டிப்போட்டது.
இதனை அறியாமலே இருப்பாயோ?
அறிந்தும்,
சொல்லத் தெரியாமலே இருப்பாயோ?
கடலில் மூழ்கும் கல்லென,
தொலைந்து கொண்டிருக்கிறேன்.
உன் காதலை ஒற்றுக்கொண்டு,
என்னைக் காப்பாற்று!!
No comments:
Post a Comment