Saturday, 15 August 2015

மாற்றங்கள் உன்னாலே!!!

மொழிகளைக் கற்றறிந்த நான்,
இன்று கடலோடு பேசுகிறேன்!

காவியங்கள் பயிலாத நான்,
இன்று கவிதைப் புனைகிறேன்!

தோழியரோடு உலவிய நான்,
இன்று தனியறையில் உறைகிறேன்!

உலகச் செய்திகள் அறிந்த நான்,
இன்று உலகை மறந்து வாழ்கிறேன்!

நிலவினை ரசித்திடாத நான்,
இன்று உறக்கம் இழந்து நிற்கிறேன்!

ஆயிரம் காட்சிகள் கண்ட நான்,
இன்று உன்னை மட்டும் காண்கிறேன்!

கண்ணாடியில் என்னை மட்டும் கண்ட நான்,
இன்று என்னருகில் உன்னையும் காண்கிறேன்!

கடவுளை வணங்காத நான்,
இன்று உனக்காக விரதம் காக்கிறேன்!

மலர்களைச் சீண்டாத நான்,
இன்று கூந்தலில் தொடுத்து ரசிக்கிறேன்!

பல விவாதங்கள் செய்த நான்,
இன்று மௌனம் மட்டும் சாதிக்கிறேன்!

மாற்றங்களே இல்லாத நான்,
இன்று உன்னால் பல மாற்றங்கள் தாங்குகிறேன்!!

No comments:

Post a Comment