Monday, 17 August 2015

பிரியாதே காதலி!

செல்கிறாய்,
என்னைப் பிரிந்து.
உடைந்தது
என் காதல் மட்டுமல்ல,
அது வளர்ந்த இதயமும் தான்!

அடியே,
உன்னைத் தாரமாக மட்டுமல்ல,
தாயாகவும் பார்க்கிறேன்!
என் உயிரைக் காப்பாற்றாது,
தீயிட்டுக் கொளுத்துகிறாய்!

கண்ட கனவெல்லாம்,
காற்றோடு கரைந்தது!
நெஞ்சின் நினைவுகள்,
முட்களாய்ப் போனது!
கண்களில் கண்ணீர்களும்,
நிற்காமல் பெருகுது!
எப்படி வாழ்வதென்று
மனமொன்று வாடுது!

மனதாரக் காதலித்து,
மானசீகமாய் வாழ்ந்துகொண்டு,
உலகின் மேல் நின்றவனை,
மண்ணுள் புதைத்துச் சென்றாயே!!

கடற்கரையில் கொட்டிய சிரிப்புகள்,
கோவிலில் சேகரித்த சத்தியங்கள்,
நேசம் வடியும் கடிதங்கள்,
உன்னை நினைவுகூரும் பரிசுகள்,
திருமணத் திட்டங்கள்,
செல்லமான ஊடல்கள்!
இவை அனைத்தும் பொய் ஜாலமோ?
உனக்கு, நானொரு கடக்கும் மேகமோ?

என்னை விட்டு ஓடுகிறாய்,
மிக வேகமாய் ஓடுகிறாய்!
இப்பூவுலகென்ன சதுரமா,
ஓர் மூலையில் நீ
முடங்கிக்கொள்ள?
பைத்தியக்காரி, 
இது வட்டமடி.
நீ ஓடியோடி,
என்னிடமே வந்து சேர்வாய்,
இவ்விடமே நான் காத்திருப்பேன்!

No comments:

Post a Comment