Sunday, 16 August 2015

கடற்கரை

கடற்கரை,
பல கோடானுகோடி கால்தடங்களைக்,
காலம் தாண்டி சுமக்கிறது!

நிலம் பெயர்ந்தோர் வாழ்வின்

துவக்கம் இங்கே!
உயிர் நீத்தோர் வாழ்வின்
முடிவும் இங்கே!

இரு மனங்கள் ஒன்றிணையும் 

சோலையும் இதுதான்!
இரு மனங்கள் உடைந்துபோகும்
பாலையும் இதுதான்!

இம்மண்ணில்,

சந்தோஷச் சிரிப்புகளும்
கொட்டிக்கிடக்கின்றன!
ரகசியக் கண்ணீர்களும்
கரைந்திருக்கின்றன!

நண்பர் கூட்டத்தின்,

குதூகலமும் இங்கே!
தனிமை வாட்டதின்,
குமுறலும் இங்கே!

இங்கு,

சாமான்யன் முதல்
சரித்திரம் படைத்தவன் வரை
அனைவருக்கும் ஓர் இடமுண்டு

மல்லிகைப்பூ மனமும் இங்குண்டு

கருவாட்டு வாடையும் இங்குண்டு
ரங்கராட்டினமும் இங்குண்டு 
கைரேகை ஜோசியமும் இங்குண்டு

இங்கு,

அரசியல், அஞ்சலி,
மதம், மனிதம்,
அனைத்திற்கும் ஒரு
மேடையுண்டு!

ஆறிலிருந்து அறுபது வரை,

அனைவருக்கும் இங்கு உரிமை உண்டு!
அனைவரின் சரித்திரத்திலும்,
கடற்கரைக்கும் சில பக்கங்கள் உண்டு!

No comments:

Post a Comment