'இந்த ரெண்டு பிள்ளைங்கள கூட்டிக்கிட்டு, ஒரு இடம் போக முடியுதா? வரமுடியுதா? இடுப்பில ஒன்னு, கையில ஒன்னு. ரெண்டும் லட்டு தான். ஆனா, சமாளிக்கத்தான் திராணி இல்ல. இதோ வீடு வந்தாச்சு! அம்மா வீடுனாலே சந்தோஷம் தான்!! இங்க வர, என்ன பாடு வேணும்னாலும் படலாம். இனி நாலு நாளைக்கு, மகாராணி உபசரிப்பு நமக்கு' என்று எண்ணப் பூரிப்பில், தாய் வீட்டினுள் நுழைந்தாள் கோதை. லதா, சுதா என்று முத்துமுத்தாய் அழகான குழந்தைகள், ஆனால் விஷமக்கார வாண்டுகள். 'என்ன!? அக்கா வந்திருக்கா போல! ஐயோ அழறாளே! எப்போ இவளுக்கு விமோசனம் கொடுக்கப்போற ஈஸ்வரா?!', என்று மனம் பதைபதைக்க, முத்தத்து தூண் மீது சாய்ந்து கொண்டு தேம்பும் அக்காவின் அருகில் சென்று அமர்ந்தாள், கோதை.
"என்ன அக்கா, எப்படி இருக்க? ஏன் அக்கா அழுவுற?? அழுது அழுது ஓஞ்சு போய்ட்ட" அரவணைப்பாய் பேசினாள் கோதை.
"அழுதழுது ஆயிசு கரைஞ்சு ஓடுதடி. இந்த காஞ்சி காமாட்சியும் மௌனம் சாதிக்கறாளே. வீடு குடுத்தா, காசு பணம், வாரி வாரி குடுத்தா. வசதி வாய்ப்புக்குப் பஞ்சம் இல்லாம பாத்துக்கறா. ஆனா, பத்து வருஷமா, நான் கேட்குற புள்ள வரம் மட்டும் தரலையேடி", என்று சொல்லி முடிப்பதற்குள், ‘ஓ!’ என்று மீண்டும் அழத்தொடங்கினாள், கோமதி.

சமையலறையில் காப்பி கலக்கும் அம்மாவைக் காணும்போது, ஏதோ ஒரு பரிதவிப்பு கோதையின் மனதில். 'இந்தப் பாவப்பட்ட ஆத்மா, இன்னும் எவ்வளவு வேதனைதான் சுமக்குமோ! இவ கடைசியா சிரிச்ச ஞாபகம் கூட இல்ல', என்று மனதுள் நொந்துகொண்டாள். தோட்டத்தில் அப்பா, கனகாம்பரப்பூக்களைப் பறித்து, சுதாவின் கூடைக்குள் போட்டுகொண்டிருக்கிறார். 'தாத்தா! தாத்தா!', என்ற லதாவின் குரல்கூட அவருக்குக் கேட்கவில்லை. இளமையின் கோலம் மொத்தமும் மறைந்து, வெறும் முதமை மட்டும் பூசிக்கொண்டு, புன்னைகையை தொலைத்து, மனதிற்குள் வேதனைகளை திணித்து திணித்து வாழும், மற்றுமொரு ஆன்மா.
'இந்த லதா, சுதா மாதிரி, நானும், கோமதியும் சின்ன பிள்ளைகளாவே இருந்திருக்கலாம். எதுவும் புரியாம, எந்த கவலையும் தெரியாம, கனகாம்பரம் வாசத்துல வாழ்ந்து முடிச்சிருக்கலாம்!’, என்று பெருமூச்சுவிட்டாள்.
"இந்தா கோதை, இந்த காப்பிய குடி" அம்மாவின் குரல், கோதையின் பொருளற்ற பகற்கனவினைக் கலைத்தது.
பிள்ளைகளை அக்காவிடம் விட்டுவிட்டு, கோதையும், அவள் அம்மாவும் மட்டும் கோவிலுக்குச் சென்றனர். அமைதி காத்த அம்மாவின் மௌனங்களை, சற்று உடைக்கத்தோன்றியது அவளுக்கு.
"அக்கா ஏன்மா ரொம்ப வருத்தத்துல இருக்கா? எப்போ வந்தா?", என்று வினவினாள்.
" என்னன்னு சொல்ல! காலைல கோலம் போட்டுட்டு நிமிர்ந்து பாத்தா, பெட்டியோட இவ நிக்கறா. ஒரு நிமிஷம் தூக்கி வாரி போட்டுடுச்சு. ‘என்ன ஒரு போன் கூட பண்ணாம இப்படி வந்து நிக்கற?’னு கேட்டா, ‘ஓ’ன்னு அழுதா அழுதா, அப்படி அழுதா. மும்பைல மாமியார் கூட சண்ட போட்டுட்டு, தானே ரயில் ஏறி, காஞ்சிபுரம் வரைக்கும் தனியாவே வந்திருக்கா. அவ மாமியாருக்கு இவள விவாகரத்து பண்ணிட்டு, தன் பிள்ளைக்கு வேற பொண்ண கல்யாணம் பண்ணனும்னு வெறி பிடிச்சிருக்கு. இவ மேல பிரியமா இருந்த உன் மாமாவும், இப்ப அம்மா பேச்ச கேட்டு, தாண்டவம் ஆடறாராம். காசு மிதமிஞ்சி இருக்கு. அவங்கள யாரு தட்டிக் கேட்கறது. இந்த பாழாபோனவ ஒரு புள்ளைய பெத்தெடுத்துட்டா, இந்த கதி வருமா? பத்து வருஷமா தூக்கம் இல்லடி, இவள நெனச்சு! வேண்டாத தெய்வமில்ல. நான் கோவிலுக்குள்ள நுழையும்போது, எல்லா சாமியும் கண்ணையும், காதையும் இறுக மூடிக்குது. இதுக்கு மேல நான் என்ன பண்ண?", என்று கண்கலங்கினாள்.
"ஏம்மா ஒரு நல்ல டாக்டரா பார்க்கலாமே?"
"மும்பைல இல்லாத டாக்டரா, இந்த கிராமத்தில இருந்திடப்போறாங்க?"
"அக்காகிட்ட தான் குறை இருக்கா? மாமாவையும் செக் அப் பண்ணணும்ல? இவள மட்டும் குறை பேசறது நியாயமில்லம்மா!"
"போராட யாருக்குத் தெம்பு இருக்கு? தைரியம் இருக்கு?"
"மாமாவுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணா மட்டும் குழந்தை பிறந்திடுமா? இன்னமும் அமைதியா இருக்கறதுல அர்த்தமில்ல. சென்னைல இருக்கற அவ மாமியாரோட அண்ணன போய் பார்த்து, இதுக்கு ஒரு முடிவு கட்டுங்க. பத்து வருஷமா குமுறி குமுறி நொந்து போனது தான் மிச்சம். நாலு பேர கூப்பிட்டு மத்தியசம் பண்றதால குடும்ப மானம் ஒன்னும் பறிபோயிடாதும்மா. அக்கா வாழ்க்கையவிட, குடும்ப கவுரவும் பெருசு இல்ல", என்று சரவெடியாய்ப் பொறிந்தாள், கோதை. அவள் சொல்வதெல்லாம் 'சரி' என்பதுபோல, மௌனமாய் சிந்தனையில் மூழ்கினாள், அவள் அம்மா.

தன் தாயிடம் கூறியதை, வீடு திரும்பிய பின், தந்தையிடமும், அக்காளிடமும் மீண்டும் விளக்கினாள், ஆனால் இம்முறை கண்ணியமாய்.
"என்னடி பேசற? என் புருஷன் மேல எந்த தப்பும் இல்ல. எல்லாம் என் மாமியாரோட வேல தான். அவருக்கு உடம்புல எந்த குறையும் இல்லடி. இப்படி பேசிக்கிட்டு இருக்காத", என்று பொங்கினாள், கோமதி.
"இவ்வளவு பாசம் வச்சிருக்க மாமா மேல! ஆனா பெட்டிய எடுத்துக்கிட்டு நீ கிளம்பறச்ச, ஏன் உன்னை தடுத்து நிறுத்தல? இன்னும் எத்தன காலத்துக்கு பைத்தியக்காரி போல வாழப்போற அக்கா?"
"நாலு பேருக்கு விஷயம் தெரிஞ்சா, அவரு சுத்தமா என்ன விலக்கிவச்சுட்டா நான் என்னடி செய்வேன்?", என்று குரல் தழுதழுக்க, மன்றாடினாள்.
"அம்மா, கலகம் பிறந்தாதான், வழி கிடைக்கும். கோதை சொல்றதுதான் சரி. அப்பா நான் இருக்கேன். கவலபடாதமா", என்று சாந்தமாய்க் கூறினார் அப்பா. அவர் குரலில் ஏதோ ஒரு நம்பிக்கை தென்பட்டதுபோல் தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள், கோதை.

மறுநாள் காலையில் அப்பா தொலைபேசியில், கோமதியின் மாமியாரின் அண்ணனிடம் பேசிக்கொண்டிருப்பதை, மற்ற மூவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். தூணில் சாய்ந்தபடியே அமர்ந்துகொண்டு, சுதாவை மடியில் வைத்துக்கொண்டு, அமைதியாய் அழுதிருந்தாள், கோமதி. லதா அவள் அருகில் உட்கார்ந்துகொண்டு, கண்ணீர் வடிய வடிய துடைத்துக்கொண்டிருந்தாள். அம்மாவும், கோதையும் ஆளுக்கொரு ஒரு தூணின் அருகில் சிலையாய் நின்றுகொண்டிருந்தனர். அப்பாவின் குரலும், கோமதியின் விசும்பலும் தவிர, உலகனைத்தும் அமைதியாய்ப் போனது அந்த வீட்டில்.
பேசி முடித்தவுடன், அப்பா நாற்காலியில் வந்து அமர்ந்தார். அவர் ஏதாவது கூறுவார் என்று எதிர்பார்த்து, பொறுமை இழந்து, கோதை அமைதியை உடைத்தாள்.
"அப்பா, பெரியப்பா என்ன சொன்னாங்க?"
"ஒன்னும் இல்ல. மாப்பிள்ளையையும், சம்மந்தியையும் சென்னைக்கு வரச் சொல்லி, பேசலாம்னு சொன்னார். அப்படியே, அவருக்கு தெரிஞ்ச டாக்டர்கிட்ட கோமதி, மாப்பிள்ளை ரெண்டு பேரையும் செக் அப் பண்ணிடலாம்னு சொன்னார்", என்று கூறி முடித்தார் அப்பா. பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கியபடியே, அந்த நாற்காலியில், போட்டு வைத்த கல்லாய்க்கிடந்தார்.
சென்னையில் தன் வீட்டிற்கு திரும்புகையில், அம்மா, அப்பா, அக்கா அனைவரையும் உடன் அழைத்து வந்தாள் கோதை. லதா, சுதா தவிர, யார் முகத்திலும் சிரிப்பில்லை. பேருந்தின் ஜன்னலோரக்காற்றில், பிள்ளைகள் தூங்கிப்போயினர். மற்றவர்களுக்கு, அழுதழுது இமையும், இதயமும் கனத்துப்போய் இருந்தது.
"கவலைப்படாதீங்க மாமா! அண்ணிக்கு எந்த குறையும் வராது. கடவுள் கை விடமாட்டார்", என்று கோதையின் கணவன் முரளி, தன் தந்தையிடம் அன்பாய்ப் பேசுவதைக்கேட்டு பெருமிதம் கொண்டாள். 'ஒரே வீட்டில், இப்படியும் ஒரு மாப்பிள்ளை! அப்படியும் ஒரு மாப்பிள்ளை!', என்று தனக்குத்தானே புலம்பிக்கொண்டாள். அம்மா எங்கு சென்றாலும், சமையலறையிலேயே தஞ்சம் கொள்வாள். யார் வீடாக இருந்தாலும், அடுக்களை மட்டும் அவள் பெயரில் பட்டா போட்டுவிட்டதுபோல், அவ்வளவு உரிமை எடுத்துக்கொள்வாள். அகண்ட உலகத்தில், அவளுக்கென்று ஒரு குட்டி உலகம் அது. “அம்மா போதும் வேலை செஞ்சது. போய் படும்மா. கலைப்பா இருப்ப", என்று கோதை கூற, 'சரி' என்பது போல் தலையை ஆட்டியவாறு நகர்ந்து சென்றாள்.

கோமதி, பிள்ளைகளோடு தூங்கிப்போனாள். நாளை ஏதோ தர்மயுத்தத்திற்கு ஆயத்தம் ஆவது போல, இனம் புரியா படபடப்பு, கோதைக்கு. ‘காலை அத்தையும், மாமாவும் மும்பையிலிருந்து வந்துடுவாங்க. மதியம் டாக்டரிடம் செக் அப் முடிந்துவிடும். நாளை மறுநாள், எல்லா ரிசல்ட்டும் வந்துடும். கடவுளே இனியாவது அக்கா மேல, இரக்கம் காட்டு', என்று மௌனமாய் பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கிப்போனாள், கோதை.
No comments:
Post a Comment