Thursday, 7 September 2017

முடிவு

“ஓ!” என்று மழை,
ஒழுகும் ஓடு,
ஓரத்திலே நான்,
ஓய்வெடுக்கும் முயற்சி!


பெற்றவளும் மறைந்துவிட்டாள்,
உற்றவளும் நீங்கிவிட்டாள்,
கந்தலான சட்டையைப்போல்,
நொந்துபோன எந்தன் மனம்!


கண்ணீரைத் துடைத்திடவே,
கையொன்றும் நீளலயே!
என் மனத்தாங்கல் கேட்டிடவே,
மனமொன்று இங்கில்லையே!


இப்பூவுலகில் எனக்கென்று
நற்றுணை ஒன்றில்லை
சிந்தையும் கலங்கியது
சித்தமும் குழம்பியது


இவ்வாழ்வின் பொருளென்ன?
நான் பிறந்த பலன் என்ன?
இன்று என் நிலை என்ன?
நாளை என் விதி என்ன?


சலித்துப்போன உடலுக்கு
சலிப்பில்லா மூச்செதற்கு?
வெட்டு பட்ட நெஞ்சிற்கு
திமிறு கொண்ட துடிப்பெதற்கு?


பொங்கி வழியும் ஊர்க்குளம்
வீட்டுள் முடங்கிய மனிதயினம்
குளத்தினுள் நான் குதித்தால்,
அவனைத் தவிற, எவரறிவார்?


கனத்த இதயம் ஓயட்டும்!
மனம் கொண்ட காயங்கள் மறையட்டும்!
கண்களும் இனி உறங்கட்டும்!
ஜீவனில் அமைதி நிலவட்டும்!!

No comments:

Post a Comment