ஊனைக்கடந்த இன்னுயிர்
உயிரைக்கடந்த ஆவி
ஆவி கடந்த ஞானம்
ஞானம் கடந்த முக்தி!
ஆசைக் கடந்த மோகம்
மோகம் கடந்த காமம்
காமம் கடந்த காதல்
காதல் கடந்த மோனம்!
விதியைக் கடந்த உறவு
உறவைக் கடந்த பரிவு
பரிவைக் கடந்த பந்தம்
பந்தம் கடந்த பாசம்!
யாக்கைக் கடந்த வனப்பு
வனப்பைக் கடந்த விழிகள்
விழிகள் கடந்த உள்ளம்
உள்ளம் கடந்த அழகு!
பிரிவைக் கடந்த துயரம்
துயரம் கடந்த நினைவு
நினைவைக் கடந்த மாற்றம்
மாற்றம் கடந்த வாழ்க்கை!
இன்பம் கடந்த துன்பம்
துன்பம் கடந்த இன்பம்
இரண்டும் கடந்த அறிவு
அறிவு கடந்த தத்துவம்!
No comments:
Post a Comment