பிறை சூடிய பித்தனே!
திருவருள் புரிந்திட வாராயோ!
மறையோதும் ஞானியர்
நல்லறிவு மொழிந்திட மாட்டாரா?!
சித்தம் கலங்கிட இங்கு வந்தேன்
கண்கள் கலங்கிட வாழுகின்றேன்
நெஞ்சம் கலங்கிடும் துன்பங்களைச்
சித்தா விலக்கிட மாட்டாயோ?
கோடிப் பிறப்புகளை நானறியேன்
கோள்களின் ராஜ்ஜியங்கள் நானறியேன்
என்னுள்ளே உனைத்தேட நானறியேன்
சக்கரத்தின் சூட்சுமத்தை நானறியேன்
பிறப்பு கொண்டு இறப்பு கொண்டு
இடையில் அசரா வாழ்வு கொண்டு
பாய்ந்து திரியும் ஆவிக்கு
ஓய்வு கொஞ்சம் தாராயோ?!
No comments:
Post a Comment