பூஞ்சோலைதனிலே
நான் நடந்து போகயிலே
மனம் எங்கோ சிறகடிக்க
எனை மறந்து நான் சிரிக்க
அவள் மடியில் தனைமறந்து
மயங்கும் அவனைப்போல்
மலர் மேலே நிலைகுலைந்து
கிறங்கும் பொன்வண்டு
தன்னைப்பிரிந்த அவளுக்காகப்
பிரார்த்திக்கும் அவன் மனம்
மலரைப்பறிக்க எத்தணித்தும்
நீளாது என் கரம்
ஆளில்லா ஊரெல்லையில்
அவனோடு அவள் காதல்
உயர்ந்த மரக்கிளையில்
இலைமறைவில் வனக்கிளிகள்
அவனை கண்டதும்
மிளிரும் அவள்முகம்
கதிரொளியில் சிலிர்த்து
ஜொலிக்கும் நீர்க்குளம்
அவளின் சிரிப்பொலி
ராகங்கள் அவனுக்கு
எங்கோ ஓர் குயிலிசை
சங்கீதம் எமக்கு
ஈருடல் ஓர் மனம்
அவளும் அவனும்
பின்னிப் படர்ந்த
செங்காந்தலும் வெண்சங்கும்!
No comments:
Post a Comment