Ad Text

Friday, 18 September 2015

தனிமை

ஊர் எல்லையின் ஒற்றை பனையாய்,
திசை மறந்த பாலைப் பயணியாய்,
கயிறருந்த காற்றாடியாய்,
சிறகிழந்த பறவையாய்,
மை கரைந்த பேனாவாய்,
தனிமைப் பிடியில் சிதைகிறேன்!

என்னுள்ளே பேசி,
என்னுள்ளே வெம்பி,
என்னுள்ளே மகிழ்ந்து,
என்னுள்ளே மடிந்து,
ஒரு கணம் சொர்கமும்,
மறு கணம் நரகமும்
விதித்த
கொடுங்கோலனடி நீ!

என்னை விட்டுச்சென்றாய்,
என் உயிரையும் ஏன் விட்டுச்சென்றாய்?
எறியும் கூட்டில்
சிக்கிய சிறு பறவையாய்,
காதலில் மூழ்கி
மீளாது மூர்ச்சையானேன்!
மதி இழந்து,
மனமிழந்து,
உணர்விழந்து,
உருகுளைந்து,
உயிர் மட்டும் காக்கிறேன்,
தனிமையின் துணையோடு!

கொன்று குவித்த
நினைவுகள் மீதேறி,
கீழே விழுந்து மடிகிறேன்,
தினம் தினம்!
பொம்மலாட்ட நாயகனாய் அன்று!
உடைந்த பொம்மைக்குவியலாய்  இன்று!
இருள்,
என் வாழ்வை மட்டுமல்ல,
என் ஆவியையும் சூழ்ந்தது!

No comments:

Post a Comment