Monday, 14 November 2016

நினைவுப்பரண்

மனமெனும் மாய அறையில்,
விசாலமாய் ஓர் நினைவுப்பரண்!
அங்கே சிறு சிறு பெட்டிகளாய்,
நினைவுகளின் தொகுப்புகள்!
சிறித்து மகிழ்ந்த இன்பங்கள் ஒன்றில்,
அழுது தீர்த்த துன்பங்கள் ஒன்றில்,
ரசித்து சலித்த காட்சிகள் வேறொன்றில்,
பயந்து ஒடுங்கிய கணங்கள் மற்றொன்றில்!
பெட்டிதனைத் திறந்து கொண்டு,
நினைவு ஒன்று எட்டி பார்க்க,
அதன் வழியே பின்தொடர்ந்து,
மற்றவைகள் அசைபோட,
நினைவலைகள் ஓய்ந்தபின்
நிகழ்காலம் நெஞ்சுணர,
நினைவுகளை பெட்டியில் பூட்டி
நினைவுப்பரண் மேல் வைத்தபின்னே,
இதழோரம் சிரிப்பு வரும்,
அழுது தீர்த்த காலம் எண்ணி!
அதனை கடந்துவர உதவியமைக்கு,
இறைவா மிக்க நன்றி!!
பலமுறை
கண்ணோரம் கண்ணீர் வரும்,
சிறித்து மகிழ்ந்த கணங்கள் எண்ணி!
அந்த நிமிடங்கள் வாழ்ந்திடவே,
இறைவா வேண்டும் மறுபிறவி!!!

No comments:

Post a Comment