அது என்ன விழியா?
இல்லை ஆலகால விஷமா?
நீ பார்த்த நொடியிலே,
என் உயிர் பிறிந்ததடி!!
---------------------------------------------
நான் ஒரு ஆண் நிலா.
யுகங்கள் பலவாயினும்,
பூமியை மட்டுமே சுற்றும் நிலா!
ஜென்மங்கள் பலவாயினும்,
உன்னை மட்டுமே பற்றுவேன் நான்!!
---------------------------------------------
பாலைவன வாழ்வினிலே,
சோலைக்குயிலாய் நீ வந்தாய்!
உன்குரலின் ரீங்காரம் பருகி,
உயிர்காத்து வாழ்கின்றேன்!
---------------------------------------------
பூக்களை ஏனடி சூடினாய்?
தாழ்மை உணர்வினில்,
தலை கவிழ்ந்து துவண்டனவே!!
மேகக்கம்பளிக்குள்
ஒளிந்து விளையாடும்
வெண்ணிலவு போல,
என் காதல் கனவோடு,
கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
"உன் கண்கள் தானே
அவளைக் கண்டன,
எனக்கெதற்கு
காதல் நோய் கொண்டு
ஆயுள் தண்டனை?",
கேட்டது என் இதயம்.
---------------------------------------------
அது என்ன,
தெருவின் மத்தியில்
ஒரு பூ மேடு?
ஓ! நீ நடந்து வந்த பாதையோ?!
---------------------------------------------
அகண்ட பாலையில்,
ஒற்றைவழிப் பூப்பாதை!
தொலைவில் ஓர் பனை மரம்,
அதன் மேல் பத்து பச்சைக்கிளிகள்!
இருட்டில் ஆழ்ந்த பள்ளத்தாக்கு,
உள்ளிருந்து கிளம்பிய ஒளிக்கட்டு!
உயிரற்ற நான்,
உயிரோட்டமாய் நீ!!
---------------------------------------------
உன் பொன்னிற அழகைக் கண்டபின்னே,
நான் காணும் காட்சிகள் யாவும்,
கருப்பு வெள்ளையாய் மாறின!
உன் தேன்வழியும் குரலைக் கேட்டபின்னே,
என்னை சுற்றியுள்ள பூமி,
ஒலியில்லா மௌனமாய்ப் போயின!
உன்னை நேசித்தபின்னே,
நான் வாழும் நொடிகள் யாவும்
வானோர் சாம்ராஜ்யம் ஆயின!
---------------------------------------------
காற்றில் மிதக்கும் சருகைபோல,
வழிமறந்து தொலைகிறேனே!
கைகள் கோர்த்து வழிநடத்த,
நீயும் வரவே தவிக்கிறேனே!
கண்கள் கட்டி, கைகளும் கட்டி,
திசை புரியா அழுகிறேனே!
கண்டதும் உன்னை, மகிழ்ந்தது நெஞ்சம்,
கடவுள் நீ, என் காதல் தெய்வம்!

குலத்திலே மீன்களின் ஆரவாரம்!
இரு தோழியரைக்கண்ட பேரானந்தம்!!
பாவம் அவை அறிந்திடவில்லை,
அவ்விரண்டும் உன் கண்கள் என்று!!
---------------------------------------------
என் தோட்டத்தில்,
கொத்துக்கொத்தாய் மாதுளைகள்,
உன் கன்னத்துச் சிகப்பை,
கடன் கேட்டு தவம் கொண்டன!!
---------------------------------------------
உன் கோபப்பார்வையின்,
அனல் கீற்றுகள்,
என் இதயத்தை துளை இட்டன.
சிறு புன்னகையை
வீசி விட்டு போ,
தடயமின்றி துளைகள் மறையும்!
---------------------------------------------
நான் பிணமாயினும்,
என்னருகே கலங்காதே!
என் கைநீளும்,
உன் கண்களைத் துடைத்திடவே!
---------------------------------------------
நீ செல்லும் சாலையோரம்,
மருத மரங்கள் நட்டேன்.
உன் கால்கள் நோகாதிருக்க,
மலர்படுக்கை அவை நெய்தனவே!
என் மனத்துயரம் தீர்ந்தனவே!!
---------------------------------------------
மேகக்கம்பளிக்குள்
ஒளிந்து விளையாடும்
வெண்ணிலவு போல,
என் காதல் கனவோடு,
கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
---------------------------------------------
"உன் கண்கள் தானே
அவளைக் கண்டன,
எனக்கெதற்கு
காதல் நோய் கொண்டு
ஆயுள் தண்டனை?",
கேட்டது என் இதயம்.
---------------------------------------------
அது என்ன,
தெருவின் மத்தியில்
ஒரு பூ மேடு?
ஓ! நீ நடந்து வந்த பாதையோ?!
---------------------------------------------
அகண்ட பாலையில்,
ஒற்றைவழிப் பூப்பாதை!
தொலைவில் ஓர் பனை மரம்,
அதன் மேல் பத்து பச்சைக்கிளிகள்!
இருட்டில் ஆழ்ந்த பள்ளத்தாக்கு,
உள்ளிருந்து கிளம்பிய ஒளிக்கட்டு!
உயிரற்ற நான்,
உயிரோட்டமாய் நீ!!
---------------------------------------------
உன் பொன்னிற அழகைக் கண்டபின்னே,
நான் காணும் காட்சிகள் யாவும்,
கருப்பு வெள்ளையாய் மாறின!
உன் தேன்வழியும் குரலைக் கேட்டபின்னே,
என்னை சுற்றியுள்ள பூமி,
ஒலியில்லா மௌனமாய்ப் போயின!
உன்னை நேசித்தபின்னே,
நான் வாழும் நொடிகள் யாவும்
வானோர் சாம்ராஜ்யம் ஆயின!
---------------------------------------------
காற்றில் மிதக்கும் சருகைபோல,
வழிமறந்து தொலைகிறேனே!
கைகள் கோர்த்து வழிநடத்த,
நீயும் வரவே தவிக்கிறேனே!
கண்கள் கட்டி, கைகளும் கட்டி,
திசை புரியா அழுகிறேனே!
கண்டதும் உன்னை, மகிழ்ந்தது நெஞ்சம்,
கடவுள் நீ, என் காதல் தெய்வம்!
---------------------------------------------
நீ ஒரு முறை தந்த
முத்தத்தினை எண்ணியெண்ணி,
ஒரு கோடி முறை சிவக்கின்றன,
எனது கன்னங்கள்!!
------------------------------------------------------------------
No comments:
Post a Comment