பூகம்பமும் நீ பூமழையும் நீ
பேரிடியும் நீ பூப்பந்தலும் நீ
மோகமும் நீ மோனமும் நீ
வறுமையும் நீ செழுமையும் நீ
பாலையும் நீ சோலையும் நீ
அனலும் நீ புனலும் நீ
மின்னலும் நீ தென்றலும் நீ
ரௌத்திரம் நீ அஹிம்சையும் நீ
மொழியும் நீ மௌனமும் நீ
வினையும் நீ பலனும் நீ
உணர்வும் நீ
என் உயிரும் நீயே!
---------------------------------------------------------
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்,
நீ தொட்டால்,
வேப்பமரத்துக் காகம் கூட மயிலாகும்!
---------------------------------------------------------
எனைக்கடந்து சொல்லாதே!
உன் துப்பட்டாவின் நுனி தீண்ட,
மின்சாரம் என்னுள் பாய்ந்ததடி!!
---------------------------------------------------------
அது என்ன கண்களா?
கொள்ளிடக்கரையா?!
பார்த்த பார்வையிலே
எனக்கு தவசம் முடிந்தது!
---------------------------------------------------------
காதலும்
நீர்ச்சூழல்தானோ?!
சிக்கினால்
மீட்பில்லையோ?!
---------------------------------------------------------
மல்லியை எதற்குச் சூடுகிறாய்?
பூஞ்சோலைக்கே பூச்செண்டா!!
---------------------------------------------------------
உன் கண்களை சற்று மூடிக்கொள்,
நீ பார்க்கும் பார்வையில்
சூரியனுக்கே தீப்பிடிக்கும்!!
---------------------------------------------------------
உனைக்கண்ட நொடியே
எனக்கு மூளைச்சாவு!
ஒன்றும் விளங்கவில்லை,
உலகம் புரியவில்லை,
உயிரோடு மட்டும் நடமாடுகின்றேன்!
---------------------------------------------------------
கடவுளைக்கண்டால்
நிச்சயம் கேட்பேனடி,
“காலனுக்கு ஓய்வுதந்து,
இக்கன்னியை அனுப்பினாயோ?” என்று
---------------------------------------------------------
சக்கரங்கள் ஏழு தானே!
நீ பார்த்தால்,
என்னுள் எழுநூறு சுழழுதடி!!!
---------------------------------------------------------
எனது காலண்டரில் மட்டும்
எப்பொழுதுமே நல்ல நேரம்,
உன்னைக் காதலிப்பதால்!!
---------------------------------------------------------
No comments:
Post a Comment