விழியில் விழுந்தாய்
உயிருள் மலர்ந்தாய்
உனை நான் துதிக்க
விதியும் சமைத்தாய்
எதற்க்கோ பிறந்தேன்
ஏதோ வளர்ந்தேன்
காதல் கொண்டபின்
காரணம் அறிந்தேன்
உனக்காக வாழ்கின்றேன்
காதல் யாகம் செய்கின்றேன்
என்னவளே உனையெண்ணி
சலனங்களைத் துறக்கின்றேன்
ஆம்மென்று சொல்வாயோ
வேண்டாமென்று செல்வாயோ
உயிருள்ளவரை ஒருபொழுதும்
காதலை நான் கைவிடேல்!
No comments:
Post a Comment