என் வீட்டு மல்லிகை
கருப்பாய்ப் பூக்குதடி
மாமரத்துக் குயிலும்
மௌனம் பூண்டதடி
என்னை நீங்கி
என் நிழலும் போனதடி
இரவில் நிலவும்
எனைக்கண்டு கரையுதடி
விண்மீன்கள் ஒவ்வொன்றாய்
தரைமேலே வீழ்ந்ததடி
வண்ணவண்ண வானவில்லில்
சாயமும் மங்குதடி
இயற்கையின் உறுப்புகள்
ஒவ்வொன்றாய் ஒடுங்குதடி
நீ பிரிந்து சென்றதால்
என் உலகே நின்று போனதடி!
No comments:
Post a Comment