என் ஆறு வயது மகன், என்னிடம் சொன்ன உண்மை மொழி. எண்ணியெண்ணி பூரித்துப்போகிறேன்!!
“அம்மா!
அடுத்த இருபதாண்டுகள்
உருண்டோடிவிடும்
எனக்கும் இருபத்தாறு
வயதாகிவிடும்
கடின உழைப்பால்
நல்லநிலை எட்டிடுவேன்
நிலை உயர்ந்தபின்
உனை நீங்கிச் சென்றிடுவேன்
என்னை எண்ணியெண்ணியே
கலங்காதே
நான் பிரிந்து செல்வதால்
வருந்தாதே
அம்மா எனும் உறவையே
அறியாத பிள்ளைகள் உண்டு
அவற்றுள் ஒரு சிலரை
வீட்டிற்கு அழைத்து வந்து
எனக்குக் கொடுத்த பாசத்தை
அவர்களுக்கும் பகிர்ந்துகொடு
யான் பெற்ற அன்னையின் அன்பு
கிட்டட்டும் சில பிள்ளைகளுக்கு!!!”
ஆறு வயது உருவுக்குள்
அகண்ட வெளிபோல் மனமோ!
ஈன்றது நானாகினும்
நீ மனிதத்தின் மகனோ!!
No comments:
Post a Comment