ஊரே ஒன்றுகூடி
கைத்தட்டுவது போல்
‘ஓ!’வென்று கொட்டும்
பெருமழை!!
இனி,
ஒடுங்கிய ஓடைகள்
வனப்பாய்ப் பாயும்
வறண்ட குளங்களில்
தாமரைகள் மிளிரும்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்த்
தவளைகள் பாடும்
நாரைகளும் மீன்களும்
கண்ணாமூச்சியாடும்
தாகத்தில் தளர்ந்துபோன
வரப்புகள் திமிரும்
தடாகத்தில் மலர்க்கூட்டம்
கொண்டாட்டம் காணும்
உனை,
வேண்டியே ஏங்கிய
உள்ளங்கள் குளிரும்
நீ,
அடிக்கடி வந்தால்தான்
உயிர்கள் வாழும்!!
No comments:
Post a Comment