உலகின் மொத்த அழகையும்
குத்தகைக்கு எடுத்துவிட்டாயோ?
இரண்டு கண்கள் போதவில்லை
உன் அழகை ரசிக்க
இன்னும் நான்கு கண்கள்
இரவல் கிடைத்தால்
என் நெற்றியிலே ஒட்டிக்கொண்டு
ஓயாமல் உனை ரசிப்பேன்!!!
-------------------------------------------
மாயக்காரி
என்ன ஜாலம் செய்தாய்?!
மந்தையில் ஆடுபோல்
மதிகெட்ட மனமிங்கு
உன்னையே தொடருதே!!!
-------------------------------------------
என் காதலை
என்னவென்று நினைத்தாய்?
கடற்கரையில் அமைத்த
மணல் கோபுரமல்ல
உயிர்கொண்டு சமைத்த
காதல் செங்கோட்டை!!!
-------------------------------------------
No comments:
Post a Comment