கன்னத்திலே கன்னம் வைத்து
தோளோடு தோள் சேர்த்து
விண்மீன்களை எண்ணிக்களித்த
இரவுகளெல்லாம் போனதெங்கே?!
கையோடு கைக்கோர்த்து
கடற்கரையில் கால் பதித்து
அலைகளோடு விளையாடியப்
பொழுதெல்லாம் போனதெங்கே?!
மார்புக்குள் முகம் புதைத்தும்
உன் மடிமீது தலை வைத்தும்
விழிமூடி எனை மறந்த
நிலையெல்லாம் போனதெங்கே?!
பேசாமல் பேசிய மொழியும்
தீண்டாமல் தீண்டிய மோகமும்
குறையாமல் பொங்கிய காதலும்
எனை நீங்கிப் போனதெங்கே?!
Super
ReplyDeleteThank you
Delete