நிஜங்களின் நிழலில் பொய்கள் தழைக்கும்
முற்றத்தின் மூலையில் மனசாட்சி கிடக்கும்
கூரிய வாள் போல நாக்குகள் சுழலும்
சத்தியங்கள் அனைத்தும் தண்ணீரில் பதியும்
பெண்மை என்பதே காமம் ஆகும்
கற்பு என்பது அதிசயமாகும்
பணம் மட்டுமே பகுத்தறிவாகும்
பண்பற்ற நிலையே நாகரீகமாகும்
‘போதும்’ என்பது துவர்ப்பாய்ப் போகும்
இரண்டே புத்தகத்தில் ஞானம் பிறக்கும்
சுயநலம் என்பது சாமர்த்தியமாகும்
பொதுநலம் பண்டிகையோடு வந்துபோகும்
உலகிலுள்ள தெய்வங்கள் கண்மூடி நிற்கும்
ஆசிரமங்கள் அனைத்தும் தொழிற்க்கூடமாகும்
நயவஞ்சகன், ஒரு நாயகன் ஆவான்
அப்பாவி இங்கே ஆண்டியாவான்
நிதர்சனம் மறந்த ஆசைகள் தோன்றும்
ஆசைவேட்டையில் வாழ்க்கைத் தொலையும்
கண்ணில் தெரிவதெல்லாம் காசாய்த் தோன்றும்
காற்றுக்கும் நீருக்கும் விலை ஒன்று கூறும்
‘ஒருவனுக்கு ஒருத்தி’ பழங்கதையாகும்
பத்தில் ஒன்று புதிய முறையாகும்
அன்பினை விளம்பரத்தில் கில்லிக்கொடுக்கும்
பிறரின் வீழ்ச்சியில் இன்பம் பெருகும்
போலிப்பகட்டு பேரின்பம் கொடுக்கும்
கடவுளிடமே பேரம் பேசும்
அடையாளம் என்பது அவமானமாகும்
பாரம்பரியம் என்பது பெரும் பிசகாகும்
அரக்கன் ஒருவனென்றால்,
வதம் செய்ய வந்திடுவான்
உலகே அறம் துறந்தால்
கடவுளும் என்ன செய்திடுவான்?!
good one...
ReplyDelete