உலகில் எத்தனையோ அரிதானவைகளில், ஆணின் கண்ணீரும் ஒன்று. எத்தனையோ துயரங்களை விழுங்கி விழுங்கி தொண்டைக்குள் அடக்கி, மனதுள் மறைத்துவைத்து, எத்தனிக்கும் கண்ணீரை கரை தாண்டிடாதபடி கண்ணுக்குள்ளே சிறை வைக்கும் திறன், ஆணிற்கு மட்டுமே உண்டு. ‘ஆண்பிள்ளை அழக்கூடாது’ என்னும் வேரூரன்றி போன நம்பிக்கை, அவனது உணர்வுகளைக் கூட வெளிக்காட்ட தடை போட்டது. ஆயினும், என்றாவது அந்த கண்களில் கண்ணீர் பொங்கிடுமாயின், அது இரும்பையும் உருக்கிடும் அன்றோ?! தன்னவளுக்காக அவன் சிந்தும் இரண்டு துளி கண்ணீர், அவன் ஆயிரம் காதல் மொழிகள் பேசினாலும் இணையாகாது. அது செய்யும் மாயங்களை மங்கையர் மட்டுமே அறிவர். அதே மாயம் தான் ரம்யாவையும் அவன்பால் ஈர்த்தது. அவளுள் மீண்டும் அவன் மீது காதல் துளிர்த்து, வேரூன்றியது.
ஒரு நாள் சூப்பர்மார்க்கெட்டில், ரம்யா முன்னே நடந்து செல்ல, சுனில் பின்னே அவளைத் தொடர்ந்து சென்றான். அன்று அவன் டிஷர்ட், ஜீன்ஸ், புது ஹேர் ஸ்டைல்’ல், ‘மாச்சோ’ போல் இருந்தான். ரம்யா தன் வசம் மயங்கிட, அவன் செய்த முதல் திட்டம். இது நாள் வரை, அவனது மூளை இப்படியெல்லாம் சிந்திக்கவில்லை. ஆனால், ரம்யா அவனோடு அன்பாய், நல்ல தோழியாய் பழக ஆரம்பித்தது முதல், அவளைக் கவர்ந்து, அவள் மனதிலும் காதலை விதைக்க வேண்டும் என்று அவன் இதயம் எண்ணியது.
கடையில், சில பல பெண்கள் அவனைப் பார்க்க, இவனும் அதை கவனிக்க, ஒரே புலாங்கிதமாய் இருந்தது அவனுக்கு. ரம்யா ஒரு இடைகழியில் நின்று, ஏதோ பார்த்துக்கொண்டு நிற்க, அவன் கைகளை முறுக்குவது, தோள்பட்டைகளை விஸ்தாலமாக்கிச் சுருக்குவது, தலையை கோதுவது என்று விதவிதமாய் சேட்டைகள் செய்துகொண்டிருந்தான். ‘எல்லா பொண்ணுங்களும் என்னை பார்க்கறாங்க, இவ மட்டும் நம்மள கண்டுக்கவே மாட்டேங்குறா… நம்ம ஸ்டைல் என்ன! பெர்சனாலிட்டி என்ன! எதுக்காவது மடங்குறாளா?!’, என்று மனதுள் எண்ணிக்கொண்டே தனது வலப்புறம் திரும்பிப்பார்க்க, பத்தடி தூரத்தில் ஒரு பெண் இவனது சேட்டைகளை ரசித்தபடி சிறு புன்னகையோடு நின்றுகொண்டிருந்தாள். அந்த வெள்ளை அழகியைக் கண்டவுடன், இவனும் புன்னகைத்தபடி மீண்டும் கையை சுழற்றுவது, தலையை கோதுவது என்று சேட்டைகளைத் தொடர்ந்தான். அவள் நகர்ந்து செல்லவே, திரும்பியவன் ரம்யா இவனைப் பார்த்தபடி நின்றுகொண்டிருப்பதைக் கண்டு அப்படியே ஷாக் ஆனான். ‘அய்யயோ! இப்படி முறைக்கறாளே! காதுல ஒரே பேட் வேர்ட்ஸ்’ஆ கேக்குது. டெலிபதில திட்டறாளோ? இவ பண்ணாலும் பண்ணுவா...’
தனது கூடையைத் தூக்கிக்கொண்டு அவனைக் கடந்து ரம்யா செல்ல, “கொடுமா நான் தூக்கிட்டு வரேன்!”, என்று பவ்யமாகக் கேட்டான். “பரவாயில்ல, அவளுக்கு வேணும்னா ஹெல்ப் பண்ணுங்க”, என்று சொல்லி நகர்ந்து சென்றாள்.
‘அடக்கடவுளே! ஏழரைச்சனி, ஜென்ம சனி, பக்கத்துவீட்டுக்காரன் சனி எல்லாமே என் தலைமேலே தான் குடித்தனம் நடத்துதா?’ என்று நொந்துகொண்டான். ‘இவள எப்படியாவது இம்ப்ரெஸ் பண்ணலாம்னா, இந்த ஜென்மத்துல நடக்காது போலிருக்கே. ஏற்கனவே இவளுக்கு என் மேல ரொம்ப மரியாதை. இப்ப முடிவே பண்ணியிருப்பா, நான் ஒரு விமனைஸர்’னு… டேஞ்சரஸ் பெல்லோ, இவள கேர்புல்லா தான் ஹாண்டில் பண்ணனும்’ என்று கவலையுடன், தனது சேட்டைகளை மூட்டை கட்டிவிட்டு, அவளுக்கு போர்ட்டர் வேலையை மட்டும் செய்தான்.
அன்றிரவு - தூக்கமின்றி ரம்யா குறுக்கும் நெடுக்கும் அவளது அறையில் நடந்துகொண்டிருந்தாள். சுனிலோ, ஆறு கரண்டி அரிசி உப்மாவை விழுங்கிவிட்டு, ஆனந்த சயனத்தில் ஆழ்ந்து போயிருந்தான். ரம்யாவிற்கு சுனில் மேல் கோபம். அவன் அந்த வெள்ளைக்காரியைப் பார்த்து ஏதேதோ வித்தையெல்லாம் செய்ததில், அவளுக்கு செம காண்டு பொங்கியது. அவனது சேட்டைகள் புதிதல்ல. ஆனால், அவளது கோபம் மிக மிகப் புதிது. காதல் தரும் முதல் மன அழுத்தம் - சொந்தம் கொண்டாடுவது. நாம் நேசிப்பவரின் இதயம் மட்டுமல்ல, பார்வை, பேச்சு, மூச்சு, வாட்ச்சு எல்லாமே நாமாக இருக்க வேண்டும் என்றொரு வெறித்தனமான வெறி.
‘டேய் சுனில்! என்ன தைரியம்டா உனக்கு? இடியட், ஸ்டுபிட், #%$^#&@&^%$##$%&&*#%$^#&@&^%$##$%&&*#%$^#&@&^%$##$%&&* (ரம்யா தனது அன்பு கணவனை சில பல வார்த்தைகளால் திட்டியதை பதிவு செய்ய முடியாத காரணத்தினால், பீப் செய்யப்பட்டுள்ளது). கட்னவ என் முன்னாடியே, இன்னொருத்திய சைட் அடிக்கற? எனக்கு வந்த கோபத்துல, கடையிலேயே உன்னை ஒரு வழி பண்ணி இருப்பேன். போனா போகுதுன்னு விட்டுட்டேன். வீட்ல என் போட்டோ கிட்ட காதல் வசனம் பேச வேண்டியது. வெளில போனா, இந்த வெள்ளைக்காரிங்களை பார்த்து சிரிக்க வேண்டியது. என்னடா என்ன பார்த்தா லூசு மாதிரி இருக்கா? நீயும் லவ் சொல்லமாட்டேங்கற. எனக்கும் எப்படி சொல்றதுன்னு தெரியல. பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு. இப்படியே விட்டா, ஒன்னும் சரி படாது. உன்னை நம்பி பிரயோஜனம் இல்ல. ஆளும் மண்டையும்! நானே பிளான் பண்ணி, இதுக்கு சுபம் கார்ட் போடறேன்’ என்று எண்ணினாள். ஆழ்ந்த சிந்தனையில் திட்டம் போட்டுக்கொண்டிருந்தவளைக் காணும்போது, ஏதோ கொலைத்திட்டம் தீட்டுவது போல் அவள் முகம் ரணகொடூரமாக இருந்தது.
ஒரு அழகிய மாலை வேலையில், ரம்யா கிச்சனில் சமைத்துக்கொண்டிருக்க, சுனில் தனது போனில் விளையாடிக்கொண்டிருந்தான்.
‘என்னதான் அந்த போன்ல இருக்கோ. எப்போ பார்த்தாலும், அதை கட்டிக்கிட்டே அழுவறான்’ என்று சலித்துக்கொண்டவளுக்கு, டக்கென உச்சி மண்டையில் ஒரு மஞ்சள் பல்ப் எரிந்தது.
‘வீசிப்போன புயலில்
என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத
அது பட்டென சாய்ந்ததடி!
எந்தன் காதல் சொல்ல
என் இதயம் கையில் வைத்தேன்!
நீ தாண்டிப்போன போது
அது தரையில் விழுந்ததடி!’
என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத
அது பட்டென சாய்ந்ததடி!
எந்தன் காதல் சொல்ல
என் இதயம் கையில் வைத்தேன்!
நீ தாண்டிப்போன போது
அது தரையில் விழுந்ததடி!’
என்று உரக்கப் பாடினாள். அவனுக்கு மிகவும் பிடித்த பாடல். அப்பாடலின் வழியே தன் காதலை உணர்த்திட முயற்சித்தாள். அவனும் அதற்கேற்றாற்போல், தான் செய்துகொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, இவள் பாடுவதை கேட்டுக்கொண்டிருந்தான். அவன் ரசிப்பதைக் கண்டதும் இவளுக்கு நாணம் பிறந்தது.
“சூப்பர் ரம்யா. இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. ரொம்ப அழகா பாடுற. வெரி நைஸ்” என்று பாராட்டிவிட்டு, அவன் போனில் விளையாட்டைத் தொடர்ந்தான்.
‘இவன வச்சு ஒரு ஊறுகாய் கூட போட முடியாது போலிருக்கே. எங்கேர்ந்து நான் டூயட் பாடுறது?’ என்று மனம் சோர்ந்தது அவளுக்கு. இருப்பினும் இன்னொரு முறை முயற்சி செய்தாள்.
‘காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாய்
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாய்
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு
தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான…’
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு
தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான…’
என்று அடுத்த காதல் ஏவுகணையைப் பாட்டாகத் தொடுத்தாள்.
“ஹே ரம்யா கலக்குற போ! இந்த பாட்டும் எனக்கு பிடிக்கும். ரொம்ப நல்லா பாடற. எவ்வளோ டாலெண்ட் வச்சிருக்க?!” என்று பாராட்டைத் தொடர்ந்தான்.
‘டேய்! உண்மையிலேயே உனக்கு புரியலையா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா?’
“நல்லா பாடுற, டேஸ்ட்டியா சமைக்கற, வீட்டை ரொம்ப அழகா டெகோரேட் பண்ற, அப்புறம் பாரதியார், பாரதிராஜாலாம் படிக்கற...”
“என்னது பாரதிராஜாவா?” என்று குறுக்கிட்டாள்.
“ஓ நோ நோ… நம்ம இவரு…”
“எவரு?”
“பாரதிதாசன்னு சொல்ல வந்தேன்”
“ஓ”
“உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. உனக்கு சீக்கிரம் ஒரு மெடல் கொடுக்கப்போறேன்” என்று கூறிவிட்டு சிரித்தான்.
‘கிழிஞ்சுது போ…’ - ரம்யா.
‘ஈ’ என்று அவளும் சிரித்து வைத்தாள்.
அவள் அறையில், அன்றிரவு - தலையணையை கையில் பிடித்துக்கொண்டு, தன் எதிரே நிறுத்தினாள். அன்று மாலை நடந்த சொதப்பல்களினால், மிகவும் ஏமாற்றம் அடைந்திருந்தாள். தலையணையை சுனிலாக நினைத்துக்கொண்டு பேசினாள்.
“டேய் சுனில்! உண்மையாவே உன்னை பெத்தாங்களா? இல்ல, மாங்கா மரத்துலேர்ந்து பறிச்சிட்டு வந்தாங்களா? சரியான மாங்காவா இருக்க. மாங்கா மட்டுமில்ல, தேங்கா, புளியங்கா எல்லாமே நீதான். எவ்ளோ சிக்னல் கொடுத்தாலும் உனக்கு ஏன் புரியவே மாட்டேங்குது?! உன்னை மியூசியத்துலதான் வைக்கணும். வர்ற ஆத்திரத்துக்கு...”, அந்த தலையணைக்கு சிலபல கும்மாங்குத்துகள் கொடுத்தாள். பிறகு அதை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு,
“சாரிடா செல்லம்! நீ ஏன் இப்படி சொதப்பற? உனக்கு ஏன் ஒன்னும் விளங்கமாட்டேங்குது? இவளோ பெரிய பழமா நீ? உன்னை எனக்கு எவ்வளோ பிடிச்சிருக்கு தெரியுமா? ஐ லவ் யூ டா. இப்படி தலையணை கிட்ட புலம்பவிட்டுட்டியே. ஏன்டா?” என்று தலையணையின் காதுகளுக்குள் புலம்பியபடியே, உறங்கிப்போனாள்.
‘இந்த வீக்கெண்ட்ல எப்படியாவது ரம்யாவை இம்ப்ரெஸ் பண்ணி, நம்ம வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிட வேண்டியதுதான்’. அவள் புகைப்படம் அருகே சென்று, ‘இந்தாம்மா ரம்யா… ஒழுங்கு மரியாதையா மாமன கவனி… நாலஞ்சு புள்ளைக்குட்டியப் பெத்து, வளர்த்து, படிக்க வெச்சு, அதுங்களுக்கு கல்யாணம் பண்ணி, பேரன் பேத்தி எடுத்து… ஷப்ப்பா… எவ்வளோ வேலை இருக்கு! பொறுப்பே இல்லாம, என்னை கலாய்க்கறதே தொழிலா இருக்க… இதெல்லாம் நல்லதுக்கில்ல… மாமன் சூடானேன், நீ காலி மகளே… பக்குவமா புரிஞ்சு நடந்துக்க’, என்று புகைப்படத்திற்கு மூச்சுவிடாமல் அறிவுரை கூறிமுடித்த பின், அவள் என்ன செய்கிறாள் என்று காணச் சென்றான்.
“என்னங்க, பட்டர் காலி ஆயிடுச்சு. கொஞ்சம் வாங்கிட்டு வரீங்களா ப்ளீஸ்.”
‘எவ்வளோ பெரிய ஆளு நான், வெண்ணெய் வாங்கிட்டு வா, வெங்காயத்தை வாங்கிட்டுவானு அசிங்கப்படுத்தறா’, என்று கடுப்பானான். ஆயினும்,
“இதோ உடனே வாங்கிட்டு வரேன்மா” என்று கூறி, கிளம்பிச்சென்றான்.
வெகு நேரமாகியும் சுனில் வீடு திரும்பாததால், கவலைகொண்டாள் ரம்யா. ‘ஒரு வெண்ணெய் வாங்க இவ்ளோ நேரமா?’ என்று எண்ணிக்கொண்டிருக்கையில், அவனிடமிருந்து அழைப்பு வந்தது.
“ரம்யா நீ சொன்ன அந்த பிராண்ட் பட்டர் இங்க இந்தியன் ஷாப்ல இல்லையே??!”
“ஒரு வெண்ணெய் வங்கறதுக்கு எதுக்கு அவ்ளோ தூரம் போனீங்க? நம்ம அபார்ட்மெண்ட் பக்கத்து கடைலயே இருக்குமே.”
“அப்படியா?! நீ எப்பவுமே எல்லாமே இந்தியன் ஷாப்ல தான வாங்குவ?!”
“எல்லாமே வங்கமாட்டேன். வெறும் நம்ம ஊரு காய்கறி, மளிகை தான் அங்க வாங்குவேன்.”
“சரி, இப்போ நான் என்ன பண்ணட்டும்?”
‘ஒரு வெண்ணெய் மேட்டர்… அதுவும் வழுக்கிடுச்சே’ என்று அயர்ந்துகொண்டான்.
“எதுவும் பண்ண வேண்டாம். திரும்ப வீட்டுக்கு வாங்க” என்றாள்.
வீடு திரும்பியதும், மேஜை மேல், ஒரு வெண்ணெய்ப் பொட்டலம் இருந்தது.
“நீயே வாங்கிட்டு வந்துட்டியா?” என்றான்.
“ஆமா, பக்கத்து கடைலயே இருந்தது.”
“அந்த கடைல நான் பார்த்ததே இல்லையே...”
“அவ்ளோ தூரம் ட்ரைவ் பண்ணிட்டு போகறதுக்கு முன்னாடி, பக்கத்துல இருக்கற கடைல செக் பண்ணிட்டு போயிருக்கலாம்ல?”
“என்னமா செய்ய? உன் அளவு ஜெனரல் நாளேட்ஜ் எனக்கு இல்லையே”
“அதுக்கு பேர் ஜெனரல் நாளேட்ஜ் இல்ல, காமன் சென்ஸ்.”
‘இதுக்கு வாய மூடிட்டு சும்மா இருந்திருக்கலாம்’ என்று தோன்றியது அவனுக்கு.
“ஆமா நீங்க M.B.A கோல்ட் மெடல் தானே?”
‘அய்யய்யோ! இப்ப இதை எதுக்கு கேட்கறா?!’
“ஆமா. எதுக்கு இப்போ கேட்கற?”
“சும்மா ஒரு ஜெனரல் நாளேட்ஜ்க்கு.”
‘டேய் சுனில்! கிளம்பிடு, இதுக்கு மேல பாடி தாங்காது’ என்று சொல்லிக்கொண்டு, அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
என்னமோ ரம்யாவிற்கு கோபமும், எரிச்சலும் சற்று தூக்கலாகவே இருந்தது அன்று. அவனைப் பற்றி சிந்தித்துக்கொண்டே வீட்டு வேலைகளில் மூழ்கிப்போனாள்.
‘இந்த பட்டர்கு ஒரு பாக்கெட் பட்டர் வாங்க தெரியல. இவனுக்கு எவன் கோல்ட் மெடல் கொடுத்தான்? கொஞ்ச நேரம் ரொமான்டிக் மூட்’ல இருக்க விடறானா? ஏதாவது கடுப்பேத்திட்டே இருக்கான். இவன்’லாம் இந்த ஜென்மத்துல நம்மள கரெக்ட் பண்ணமாட்டான். நாம களத்துல இறங்கலாம்னா, என்ன செய்யன்னு தெரியல, ஒரே குழப்பமா இருக்கு. அவன் மேல தான் கோபம் வருது. உண்மையாவே அன்னிக்கு ராத்திரி நம்மகிட்ட அப்படி நடந்துகிட்டானா? இல்ல ப்ரம்மையா? இவன் பண்றத பார்த்தா, அவ்வளோ பெரிய சீன் எல்லாம் இவனுக்கு சூட் ஆகமாட்டேங்குது. ஒரு வேலை தண்ணி அடிச்சதுல வீரம் வந்திருக்குமோ?! அப்போ நாமளும், சரக்கு வாங்கி, சூப்ல கலந்து கொடுத்துட்டா என்ன?! சீச்சீ… நம்ம நிலைமை இவ்ளோ கேவலமா ஆயிடுச்சே? இந்த பாட்டியாகாரி சொன்ன மாதிரி ஆயிடுச்சு. எப்போ பார்த்தாலும் அப்பா கிட்ட, ‘உன் பொண்ணு துடுக்கா இருக்கா, நல்ல அம்மாஞ்சியாப் பார்த்து கட்டி வை’ என்பாளே. இப்போ அதே மாதிரி ஆயிடுச்சு. ஏ பாட்டி! உன் நல்ல நேரம் நீ செத்துட்ட. இல்ல இந்நேரம் நானே உன்ன மர்டர் பண்ணியிருப்பேன்’ என்று எண்ணிமுடிக்கையில், அவள் கண்ணில் தென்பட்டது அந்த வெண்ணெய்ப் பொட்டலம். அங்கிருந்த பேனாவை எடுத்து, அதன் மேல் எழுதியிருந்த பெயரை அடித்துவிட்டு சுனில் என்று எழுதினாள். ‘சுனில் பட்டர்’ - பெர்பெக்ட்!’, என்றவளுக்கு, சட்டென எரிச்சல் மறைந்து, சிரிப்பு வந்தது.
மறுநாள் ஓரக்கண்ணாள் ரம்யாவை ரசித்துக்கொண்டே, பழச்சாறு அருந்த, குளிர்சாதனப்பெட்டியைத் திறந்தான், சுனில். திறந்ததும் வெண்ணெய்ப் பொட்டலம் அவன் கண்ணில் பட்டது.
“யாரு பார்த்த வேலையிது? ‘சுனில் பட்டர்’னு எழுதியிருக்கு?!” என்றான்.
சிரிப்பை அடக்கிக்கொண்டு ரம்யா, “நான் தான் சும்மா உங்க ஞாபக அர்த்தமா எழுதிவச்சேன்.”
“இவ்வளோ பெரிய வீட்ல என் பேர எழுத இந்த பட்டர் பாக்கெட் தான் கிடைச்சுதா?”
“ரொம்ப யோசிச்சு பார்த்தேன். இந்த பட்டர் பாக்கெட் தான் உங்க பேருக்கு பொருத்தமா இருந்தது” என்று கூறி, நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
‘அசராம நம்மள வெச்சு செய்யறாளே!’ என்று தலைதொங்கியபடி சென்றான். சுவரில் தொங்கிய வள்ளி தெய்வானை சமேத முருகன் படம், எதேச்சையாக அவன் கண்ணில் பட, ‘வொய் காட்? வொய் மீ? சர் மட்டும் லெப்ட்ல ஒன்னு, ரைட்ல ஒன்னுன்னு, ஜிலு ஜிலுனு இருக்கீங்களே, இங்க ஒருத்தன் காஞ்சுபோயிருக்கேனே, ஏதாவது ஏற்பாடு செய்யக்கூடாதா? பூனைக்குட்டி மாதிரி இருந்த பொண்டாட்டி, இன்னிக்கி பாரபட்சம் இல்லாம என்ன வெச்சு காமெடி ஷோவே நடத்துறா. என் நிலைமை என்னோட எதிரிக்குக்கூட வரக்கூடாது’ என்று பெருமூச்சுவிட்டான்.
No comments:
Post a Comment